நல்ல டீ.என்.ஏ க்களின் இடப்பெயர்வின் விளைவே இன்றைய யாழ்ப்பாணம். லண்டனிலும்,கனடாவிலும்,கொழும்பில் வெள்ளவத்தையிலும் இன்னும் பெருமைமிகு மேதாவித்தனமும் - அடிப்படை மனிதப் பண்புகளுமுள்ள யாழ்ப்பாணத்தவரைக் காண முடிகிறது.
ஆனால் அனைத்து உயர் கலைகளும் கல்வியும் விளைந்து பெருகிய கலைமாண்புகளின் சொந்த நிலமாகிய யாழ்ப்பாணத்தில் இன்று எந்த பெறுமதியும் அறியாதவர்களையே சுற்றிச் சுற்றிக் காண முடிகிறது.
இன்று காலை, கனடா வாழ் கலைஞர்களின் ஒரு சில இசை அல்பங்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. என்ன ஒரு மென்மை ? என்ன ஒரு உயர் கலை வண்ணம் ? - என்ன ஒரு இசை - ஒளி அமைப்பு ? . அவர்கள் எல்லாம் யாழ்ப்பாண வழித்தோன்றல்கள் ஆனால் வெளிநாடுகளில் பிறந்தவர்கள். நல்ல தமிழில் பண்ணபான உயர் கலைப் படைப்புக்களை வெளியிட்டிருந்தார்கள்.
கொலையன்,வெறியன், திமிர் பிடித்தவன் என்று இன்றைய யாழ்ப்பாணம் வாழ் மக்களின் தரத்தை வெளிப்படுத்தும் - தாடி மீசை அதிகம் வைத்த - படிப்பறிவை வெளிப்படுத்தாத ரௌடிக் கதாநாயகர்களின் குப்பைக் கதைகளைக் கொண்ட - அல்லது மிக விலை உயர்ந்த கமெராக்களையும் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி - சுவையே இல்லாத - ஆயிரம் தடவை இந்திய சினிமாக்களில் கண்டு சலித்துப்போன கதைகளைக்கொண்ட குறும் திரைப்படங்களைக் கண்டு வெறுத்துப்போன எனக்கு - இந்த வீடியோக்கள் ஈழத்தவர் சினிமா பற்றிப் புதிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது.
கல்வி-நன்னெறி-மனிதாபிமானம் என்பவை சான்றிதழ் அளவில் மட்டுமே வளர்ந்திருக்கிறது- 1995 இற்கு பின்னர் (மாபெரும் இடப்பெயர்வின் பின்)உருவான இன்றைய யாழ்ப்பாணத்தில்.