This article summarizes the dark side of using VPN(Virtual Private Network)services for free. How your privacy could be on risk? and, why they offer free services like this? What sort of other security issues you can have bye using VPN are briefly discussed in this article in Tamil.
வி.பி.என். என்ற சேவை உங்களிற்கு ஏன் இலவசமாகக்கிடைக்கிறது என்று ஒரு நிமிடம் சிந்தித்திருப்பீர்களா ?
'இந்த உலகத்தில் எதுவும் இலவசம் இல்லை ' என்பது பிரபலமான ஒரு கூற்றாகும். மனசாட்சியுடன் பதிலளியுங்கள , எந்த இலாபமும் இல்லாமல் ஒரு பொருளைத்தயாரித்து நிறைய பராமரிப்புச் செலவையும் பொறுப்பெடுத்து அதை சமூகத்திற்கு இலவசமாக நீங்கள் வழங்குவீர்களா ? அதுவும் அரசாங்கங்களின் சட்டங்களை மீறுவதற்காக ?ஒரு நாட்டின் சட்டத்தை மீறி அந்த நாடு தடை செய்தவற்றை பார்க்கும் நீங்கள் ஒரு குற்றவாளி அல்லவா ? அவ்வாறு இருக்கும் சந்தர்ப்பத்தில் அதைப்பார்க்க உதவி உங்கள் சட்ட மீறலிற்கு உதவும் அடுத்த குற்றவாளி வி.பி.என் சேர்வர்களாகும். கள்ளனுக்கு கள்ளன் துணை என்றாலும். இரண்டு கிறிமினல்களும் ஒருத்தரோடு ஒருத்தர் நேர்மையாக எப்போதும் இருக்க வாய்ப்பில்லைத்தானே ?
எங்கள் சமயப்படி நான்பொய்கூடச்சொல்லமாட்டேன் என்று முழங்கும் எனது நண்பர்கள் பலர்தான் (அதென்னவவோ தெரியவில்லை அதிகம் சமயத்தைப் பற்றிப்பேசுபவன்கள்தான் அதிகம் கள்ளன்களாக இருக்கிறான்கள் ) முதன் முதல் வி.பி.என். போட்டு சோசல் மீடியா எல்லாவற்றையும் துழாவ அரம்பித்தது. களவுக்குக் கூட (ஏன் கொலைக்கும்) கடவுளைத்துணைக்களைக்கும் மிலேச்சர்கள் வாழும் உலகுதானே இது.
பலருக்கு நேர்மையும் தர்மமும் சோசால் மீடியாப் பதிவுகளிற்கும் சோசல் மீடியா ஸ்ரேட்டசுக்கும்தானே. சரி வி.பி.என்னைப் பற்றிப் பார்ப்போம்.
இந்தத் தடைசெய்யப்பட்ட இணையப்பக்கங்களை அரசாங்கங்களிற்குத்தெரியாமல்(தெரியாதென நினைத்துக்கொண்டு) திருட்டுத்தனமாக பார்க்கும் திருடர்களிடமிருந்து இந்த வி.பி.என் எதைத்திருடுகிறது ? பார்க்கலாம்.
இலங்கையில் இடம்பெற்றுள்ள(21-04-2019) பயங்கரவாதிகளின் மிலேச்சத் தனமான தாக்குதலைத்தொடர்ந்து - சமூக வன்முறைகள் வதந்திகளைத் தடுக்கும்பொருட்டு இலங்கை அரசாங்கம் பிரபலமான சமூக வலைத்தளங்களை தடை செய்துள்ளது (தற்காலிகமாக)ஆனாலும் பெருமளவான இலங்கையர்கள் வி.பி.என். எனப்படும் கள்ளச்சாவி போட்டு அவற்றைப் பார்வையிட்டுத்தான் வருகிறார்கள். அவர்களிற்காகவே இந்தக் கட்டுரை
1) உங்கள் பிறவுசிங் ஹிஸ்ட்றி எனப்படும் நீங்கள் எந்த எந்த இணையத்தளங்களிற்குச் சென்றீர்கள் எவ்வளவு நேரம் செலவளித்தீர்கள் அங்கு என்ன என்வெல்லாம் செய்தீர்கள்(கிளிக்,செயார் ..)என்ற விபரங்களை உங்கள் கணினிகளில் அல்லது மொபைல் கருவியில் அது(VPN) உங்களிற்குத்தெரியாமல் இறக்கி வைக்கும் 'குக்கீஸ்' எனப்படும் சிறு கோப்பில் சேகரித்து வைத்து அவ்வவ் வி.பி.என் நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளும்.
2) வெப் பேக்கன்ஸ்(Web Beacons )பிக்சல்ஸ் எனப்படும் இன்னும் இருவகை உங்கள் இணைய நடவடிக்கை வழித்தடத்தை(Tracking ) படங்களாக மிக விபரங்களாக பதிவு செய்யும் சிறு மென்பொருட்கள் உங்களிற்குத்தெரியாமலே உங்கள் இணையப் பயன்பாட்டுக் கருவியில் நிறுவப்பட்டு உங்கள் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்.
3) சேகரிக்கப்பட்ட உங்கள் விபரங்கள் - இணைய விளம்பர நிறுவனங்களிற்கு விற்கப்படும். அதன் மூலமாக உங்கள் வயது ,விருப்பங்கள்,Emailஇணையப்பயன்பாட்டுத் தகவல்களிற்கு ஏற்ப (அதெப்படி என் வயது அவர்களுக்கத்தெரியும் என்று அப்பாவியாக கேட்காதீர்கள் - உங்களைப்பற்றி அனைத்தும் தெரிவிக்குமு; வி.பி.என்.) விளம்பரங்கள் நீங்கள் செல்லும் இணையத்தளங்களில் காட்டப்படும்.(உங்கள் மூலமாக மறைமுகாக சம்பாதிப்பார்கள்)
4) உங்கள் தகவல்கள், ( Name,Email Address,and more) தகவல் சேகரிக்கும் நிறுவனங்களிற்கு விற்கப்படும். அவை உங்கள் தனிப்பட்ட தகவல்களை பல்வேறுபட்ட தேவைகளிற்கு உங்கள் அனுமதியின்றியே பயன்படுத்துவார்கள்.
5) உங்களை அறியாமலே நீங்கள் குறிப்பிட்ட ஒரு பொருளை வாங்குவதற்கோ அல்லது கட்சிக்கு வாக்களிக்கவோ மறைமுகமாக உங்களை இலக்கு வைத்து இயக்கப்படும் விளம்பரங்கள் மூலம் மூளைச்சலவை செய்யப்படுவீர்கள்.
6) உங்கள் வங்கி ,பொருளாதார,கிறெடிட் கார்ட் ,இன்ரநெற் ,மெயில் பாஸ்வேர்ட்கள் திருடப்பட்டு உங்கள் சுதந்திரம் பறிபோவதுடன் உங்கள் பணமும் பறிபோகலாம்.
7) உங்கள் கருவிகளிலிருக்கும் -உங்கள் தனிப்பட்ட மற்றும் இரகசிய புகைப்படங்கள்,வீடீயோக்கள்,ஒலிக்குறிப்புக்கள் அனைத்தையும் தேவைப்படின் திருடிக்கொள்வார்கள். ஏதாவது தப்பான விடயங்கள் இருப்பின் அவை வேறு இணையப்பங்கங்களில் பிரசுரிக்கப்படலாம்.
உங்களிற்குத்தெரியாமலே சில இணையத்தளங்களில் நீங்கள் பிரபலமாகலாம் :) )
8) நீங்கள் பெரும் செல்வந்தராக இருக்கும் பட்சத்தில் பணம் கேட்டு பிளக்மெயில் செய்யப்படலாம்.
9) உங்கள் கம்பியூட்டரை இன்னொரு விபிஎன் சேர்வராகப் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்களை அறியாமலே உங்கள் கம்பியூட்டரில் வேறு நபர்களின் கோப்புக்கள் சேமிக்கப்பட்டு பரிமாறப்படலாம்.
10)நீங்கள் வைரஸ்,மல்வெயார்,ஸ்பைவெயார் எனப்படும் மோசமான மென்பொருள் தாக்குதலுக்கு இலகுவான இலக்காகலாம்.
இவ்வளவு ஆபத்தும் எனக்கு வராது ஏனென்றால் - அடுத்த வேளை சோத்துக்கு அல்லாடும் ஒரு அன்னக்காவடி என்னிடம் இழப்பதற்கு எதுவுமில்லை என்று எண்ணுபவர்கள் கவலையே இல்லாமல் வி.பி.என்னைப் பயன்படுத்தி ஜமாய்க்கலாம். என்ஜோய் !
Thanks useful continue
ReplyDelete