ஆறாம் வகுப்பிலே கொமிக்ஸ் புத்தகங்கள்(சித்திரக் கதைப்புத்தகங்கள்)பரிமாறிக்கொள்வதிலிருந்து அறிமுகமாகி திடீரென நண்பனானவன் மதன். புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து யாழ் இந்துவிற்கு நுழைந்த மாணவர்களை மட்டும் கொண்டதாக இருந்தது ஆறாம் வகுப்பு - ஈ பிரிவு. அங்கேதான் நாம் சந்தித்துக்கொண்டோம்.
சற்று மிதந்த பற்களுடன் கண்களில் ஒளியுடன் மென்மையாகப் பேசக்கூடியவன் மதன். நான் கச்சேரி நல்லுார் வீதியில் எனது பெரியம்மாவின் வீட்டில் தங்கியிருந்து பாடசாலை சென்று கொண்டிருந்தேன். நான் ஒரு சிறிய மீன்தொட்டியையும் அதில் கொஞ்சம் மீன்களையும் வைத்திருந்தேன்.
மதனுக்கு அந்த மீன்களில் ஆர்வம். அடிக்கடி அவற்றை வந்து பார்வையிடுவான். மதனுக்கும் எனக்கும் நட்பு ஆரம்பித்து சில வாரங்கள்தான் இருக்கும். ”நீர்” என்று யாழ்ப்பாணத்துக்கே உரிய மரியாதைப்பன்மையில் பேசிக்கொள்ளுமளவுக்கு மட்டும்தான் நாம் நெருங்கியிருந்தோம் .
திடீரென்று ஒருநாள் வீட்டு வாசலில் வந்து மணியடித்தான் மதன் . கையில் ஒரு நீர் நிரப்பிய பிளாஸ்டிக் பை . அதனுள் ஒரு சோடி அழகிய ஏஞ்சல் மீன்கள். ஏஞ்சல் மீன்கள் என் மனதை மயக்கும் ரம்மியம் மிக்கவை ஆனால் வாங்கக் காசில்லாமல் அம்மா வட்டக்கச்சியிலிருந்து லீவுக்கு வரும்போது கேட்போம் என்று இருந்தேன்.
இவன் கையில் மீன்களுடன் நிற்கிறான். எனக்குப் புரியவில்லை. கதவைத்திறந்து ”என்ன ஐசே ?” (என்ன) என்றேன். ”இது உமக்குத்தான் தொட்டியில விடுவம் வாரும் ”என்று உள்ளே வந்தான். மீன்களைத்தொட்டியில் விட்டு அவை நீந்தும் அழகை இரசித்து விட்டுச் சென்றான். மதன் அவற்றை அப்போது கந்தர்மடம் சந்தியிலிருந்த அம்பிகை அக்கூறியம் என்ற கடையிலிருந்து வாங்கி வந்திருந்தான்.
எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் கொடுக்கும் ஒரு உயர் குணத்தை 12 வயதிலேயே மதன் எனக்கு செய்து காட்டியிருந்தான். மதனது தந்தை தாய் இருவருமே அரசில் உயர் தொழில் புரிந்தவர்கள். மிகப் பண்பான குடும்பம் அவனது. ஒட்டுமொத்த குடும்பத்தின் பண்பு பிள்ளைகளிலும் தெரிவது சகஐம்தானே.
அதன் பின்பு, வகுப்புப் பிரிவின் மாற்றங்களால் மதனைச் சந்திக்கும் தருணங்கள் குறைந்தது.ஆனாலும் வாழ்வின் முக்கிய மாற்றங்களின் போதெல்லாம் அவனைச் சந்தித்து வந்திருக்கிறேன். அவனைக் காணும்போதெல்லாம் அவன் மீன் வாங்கித்தந்த அந்த சம்பவமும் அதன் மூலம் அவன் வெளிக்காட்டிய உயர்ந்த அன்பும் எனக்கு நினைவுக்கு வரும்.
இந்தச் சம்பவத்தின் பின் வாழ்வில் எதிர்பாராமல் பாரிய உதவிகளைச் செய்த நண்பர்கள் பலரைக் கண்டிருக்கிறேன். எனினும் மதனை மறக்க முடிவதில்லை.
ஆறாம் வகுப்பில் தனது கொப்பியை நாம் தொட்டால் படிப்பு போய்விடும் என அழுதவனையும். சாப்பாட்டுப் பெட்டியை முதுகு காட்டித்திரும்பி இருந்து கவனமாகச்சாப்பிடும் சகபாடியையும், நமக்கு நாக்கு ஊற ஊற ஐஸ் சொக் இரண்டு மூன்றை தனியே சாப்பிட்டு விட்டு எனது சைக்கிளில் தொத்தி இலவச சவாரி அடித்தவனையும் நீங்கள் கண்டிருந்தால் தான் உங்களுக்கும் இந்த செய்கை பெரிதாகப்படும்.
இந்தச் சம்பவத்தின் பின் வாழ்வில் எதிர்பாராமல் பாரிய உதவிகளைச் செய்த நண்பர்கள் பலரைக் கண்டிருக்கிறேன். எனினும் மதனை மறக்க முடிவதில்லை.
ஆறாம் வகுப்பில் தனது கொப்பியை நாம் தொட்டால் படிப்பு போய்விடும் என அழுதவனையும். சாப்பாட்டுப் பெட்டியை முதுகு காட்டித்திரும்பி இருந்து கவனமாகச்சாப்பிடும் சகபாடியையும், நமக்கு நாக்கு ஊற ஊற ஐஸ் சொக் இரண்டு மூன்றை தனியே சாப்பிட்டு விட்டு எனது சைக்கிளில் தொத்தி இலவச சவாரி அடித்தவனையும் நீங்கள் கண்டிருந்தால் தான் உங்களுக்கும் இந்த செய்கை பெரிதாகப்படும்.
இவன் இன்று முன்னணி (காது மூக்கு தொண்டை)வைத்திய நிபுணன். நாம் சில சமயங்களில் சந்திக்கும், காசை மட்டுமே குறியாகக்கொண்டியங்கும் வைத்தியர்கள் போலன்றி உண்மையான அக்கறையோடு நோயாளிகளை அணுகும் ஒரு மனிதாபிமானம் நிறைந்த வைத்தியனாக இவன் இருப்பான் என உறுதியாக நம்புகிறேன.(அறிகிறேன்).
பணம் சேர்ப்பதையும், எந்தப்பொருளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து விடாதிருப்பதையும்தான் பல பெற்றோர்கள் இன்று பிள்ளைகளிற்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். கொடுத்து வாங்கி வாழ்வதில் இருக்கும் சிறப்பை நாம் நம் பிள்ளைகளிற்கு சொல்லிக் கொடுப்போம். அவர்களது பெருந்தன்மையினால் அவர்கள் பல நல்லவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். எதிர்காலத்தில் அவர்களும் வாழ்வில் பிரகாசிப்பார்கள். இது நம்பிக்கை. என் அனுபவம்.
Super
ReplyDeleteஆறாம் வகுப்பில் தனது கொப்பியை நாம் தொட்டால் படிப்பு போய்விடும் என அழுதவனையும். சாப்பாட்டுப் பெட்டியை முதுகு காட்டித்திரும்பி இருந்து கவனமாகச்சாப்பிடும் சகபாடியையும், நமக்கு நாக்கு ஊற ஊற ஐஸ் சொக் இரண்டு மூன்றை தனியே சாப்பிட்டு விட்டு எனது சைக்கிளில் தொத்தி இலவச சவாரி அடித்தவனையும் நீங்கள் கண்டிருந்தால் தான் உங்களுக்கும் இந்த செய்கை பெரிதாகப்படும்.
இவை உண்மையின் வரிகள் சேர்..உங்களது எழுத்துக்கள் இன்னுமின்னும் வாசித்தலை தூண்டுவனவாக இருக்கிறது சேர்...இரண்டு வருசம் வேறு தேசத்துக்குப்போயிட்டு வந்தே தமிழை மறந்திட்டம் எண்டு பெருமையாச் சொல்லுற யாழ்ப்பாணத்தவன் வாழுற இந்தக்காலத்தில எப்பவோ நடந்த இந்த சின்ன விடயத்தை ரசனை கலந்து நீங்கள் எழுதினது..மகிழ்ச்சி சேர்..அதுவும் மீன் வாங்கின கடையைக்கூட குறிப்பிடுகிறீங்கள் எண்டால் சுப்பர்.
எனக்கு விளங்கிறது..என்னெண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் ரசிச்சு புதுமையா வாழ்ந்த ஒருவராலதான் சேர் சின்ன விசயங்கள கூட ஞாபகம் வைக்கிற அதேவேளை சந்தோசமாயும் இருக்க முடியும்..
வாழ்த்துக்கள்..
இந்த எழுத்தை உணர்ந்து வாசித்து ,சிலவற்றை அகக் காட்சியாகக் கண்டு, எழுத்தாளரின் மனோவியல்பைக்கூட படம்பிடிக்க முயன்ற உங்களுக்கு வாழ்த்துக்கள் அம்பிகை. நீங்கள் நயந்த விதத்தில் உண்மையும் நேர்மையும் தெறிக்கிறது. நம்ம எழுத்தின் அடி நாதம் ஒரு சிலருக்கேனும் புரிகிறது என்ற செய்தி உங்கள் வழியாகத் தெரிகையில் ” மகிழ்ச்சி” . நல்வார்த்தைகளிற்கு நன்றிகள்.
Deleteஅருமை்மணி. ஐயர் என்று என்னையும் ஒளிஞ்சு இருந்து சாப்பிட சொல்லி இருப்பாங்கள். அப்படி சம்பவம் நடந்திருந்தால் மன்னிக்கவும்.
ReplyDeleteMani, Mathan is your "birthday twins" too.You both share the same birthday.
ReplyDeleteReally true
Delete