நல்ல டீ.என்.ஏ க்களின் இடப்பெயர்வின் விளைவே இன்றைய யாழ்ப்பாணம். லண்டனிலும்,கனடாவிலும்,கொழும்பில் வெள்ளவத்தையிலும் இன்னும் பெருமைமிகு மேதாவித்தனமும் - அடிப்படை மனிதப் பண்புகளுமுள்ள யாழ்ப்பாணத்தவரைக் காண முடிகிறது.
ஆனால் அனைத்து உயர் கலைகளும் கல்வியும் விளைந்து பெருகிய கலைமாண்புகளின் சொந்த நிலமாகிய யாழ்ப்பாணத்தில் இன்று எந்த பெறுமதியும் அறியாதவர்களையே சுற்றிச் சுற்றிக் காண முடிகிறது.
இன்று காலை, கனடா வாழ் கலைஞர்களின் ஒரு சில இசை அல்பங்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. என்ன ஒரு மென்மை ? என்ன ஒரு உயர் கலை வண்ணம் ? - என்ன ஒரு இசை - ஒளி அமைப்பு ? . அவர்கள் எல்லாம் யாழ்ப்பாண வழித்தோன்றல்கள் ஆனால் வெளிநாடுகளில் பிறந்தவர்கள். நல்ல தமிழில் பண்ணபான உயர் கலைப் படைப்புக்களை வெளியிட்டிருந்தார்கள்.
கொலையன்,வெறியன், திமிர் பிடித்தவன் என்று இன்றைய யாழ்ப்பாணம் வாழ் மக்களின் தரத்தை வெளிப்படுத்தும் - தாடி மீசை அதிகம் வைத்த - படிப்பறிவை வெளிப்படுத்தாத ரௌடிக் கதாநாயகர்களின் குப்பைக் கதைகளைக் கொண்ட - அல்லது மிக விலை உயர்ந்த கமெராக்களையும் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி - சுவையே இல்லாத - ஆயிரம் தடவை இந்திய சினிமாக்களில் கண்டு சலித்துப்போன கதைகளைக்கொண்ட குறும் திரைப்படங்களைக் கண்டு வெறுத்துப்போன எனக்கு - இந்த வீடியோக்கள் ஈழத்தவர் சினிமா பற்றிப் புதிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது.
கல்வி-நன்னெறி-மனிதாபிமானம் என்பவை சான்றிதழ் அளவில் மட்டுமே வளர்ந்திருக்கிறது- 1995 இற்கு பின்னர் (மாபெரும் இடப்பெயர்வின் பின்)உருவான இன்றைய யாழ்ப்பாணத்தில்.
அது இடம்பெயர்ந்திருக்கிறது.
ஒட்டுமொத்தமாக இடம் பெயர்ந்து அங்கும் இங்குமாகச் சிதறிக்கிடக்கிறது - உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும்.
யாழ்ப்பாண நவீன வரலாற்றை சமூகவியல் மாற்றங்களை அடிப்படையாக வைத்து
1) 95 ற்குப் பின்னர்( இலட்சக்கணக்கான மூளைசாலிகள் வெளியேறிய பின்னர் உருவானது)
2) 95ற்கு முன்னர்
என்று இரண்டாகப்பிரிக்கலாம்.
இப்போது 1995 இற்குப் பின்னர் சுமார் பத்து வருடங்களாக உருவாகி வளர்ந்து நிற்கும் வலுக்குறைந்த பரம்பரைகளை மாற்ற முடியாது என்பதால் அதை விடுத்து இதன்பின்னர் உருவாகி வரும் புதிய தலைமுறையையாவது வலுவூட்டல் வேண்டும்.
அதற்கு அந்த 1995 இன் பிற்பட்ட காலங்களில் இளையவர்களாக இருந்து நல்ல பெறுமதிகளை வாழ்வில் பார்த்து வளர்ந்திராத பெற்றோர்கள் தடையாக உள்ளார்கள்.
1995இன் மாபெரும் இடப்பெயர்வில் யாழ்ப்பாணத்தின் வலிவுள்ள - பாரம்பரியமிக்க குடும்பங்களும் கல்வியியலாளர்களும் வெளியேறிவிட (செல்வாக்குள்ளவர்களால் மட்டுமே இலகுவில் இடம் பெயர முடியும்) பெரும்பாலும் அவ்வாறு செல்ல முடியாது நின்றவர்களாலே ஆனதே இன்றைய யாழப்பாணம்.
விழுமியங்களைத் தொலைத்த யாழ்ப்பாணம்
பணம் இருந்தால் அனைவரும் ஒன்று என நினைக்கிறார்கள் . வாழ்வியல் சார்ந்த பெறுமதி தெரிவதில்லை. இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ”பெறுமதிகள்” எவை என அந்தப் பெறுமதிகளை உணர்ந்த வழியில் வந்தவர்க்கு மட்டுமே புரியும்.
யுத்தமும் மூளைசாலிகள் மற்றும் ஆளுமையாளர்களின் வெளியேற்றம் என்பவையும் விதிவசத்தால் நடந்தது. தவறு இயற்கையினுடையது அல்லது தெய்வத்தினுடையது. இங்குள்ள பெரும்பான்மை மனிதர்களுடையது அல்ல. அவர்கள் உண்மையில் அறியாதவர்கள். தரம் அறியாமையாலேயே அவர்களது தரம் தாழ்ந்து போயுள்ளது. இடம்பெயர்ந்த யாழ்ப்பாணத்தின் ஒரு 10 வீதம் திரும்பி வந்தாலும் போதுமானது இவர்களை மாற்ற.
தொடர்ச்சியற்றுப்போன கலாச்சாரம் / வாழ்வியல் : - யுத்தகாலத்தில் இராணுவக்கட்டுப்பாட்டிலும் (யாழ்ப்பாணத்தில்) பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டிலும்(கிளிநொச்சி கடக்கையில்) வாழ்ந்து இரு சாராரருக்கும் பொய்களைச் சொல்லி உயிரையும் உடமையையும் காப்பாற்றி பொய்யை கண்ணில் தெரியாமல் சொல்ல வேண்டிய கட்டாயச் சூழலில் வாழ்ந்த காலத்தில், அவர்களிற்குப் பிறந்த குழந்தைகள் பல பல பெறுமதிகளைத் தவறாகவே கண்டு வளர்ந்ததும் தரக் குறைவிற்கு ஒரு காரணம்.
யுத்தம் என்ற அரக்கன் விதைத்த விடச் செடிகளில் இந்த விளைவும் ஒன்று.

[இந்த வீடியோவில் இன்றைய பிறழ்வுகளை கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் சில நிமிடங்களில் சொல்கிறார்.]
இடம்பெயர்ந்த அந்த யாழ்ப்பாணத்தவரின் பிள்ளைகள் கொழும்புக் கல்லுாரிகளில் சாதிக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் பாரம்பரிய பாடசாலைகளின் இன்றைய நிலை அனைவரும் அறிந்ததே.
உதாரணமாக கொழும்பில் உள்ள சிங்கர் சோறூமும் யாழ்ப்பாணத்தில் உள்ளதும் பெயரளவில் மட்டுமே ஒன்றாக இருக்கும் சேவைத்தரங்கள் தலைகீழ் .வங்கிகள் மற்றைய நிறுவனங்களும் அப்படியே. பெரிய பெரிய ஹோட்டல்கள் ஸ்டார் லெவல் கட்டட வசதிகயோடு இருக்கும் சென்று பாருங்கள் சேவைத்தரத்தை கற்பனை செய்ய முடியாத கேவலமாக .இருக்கும். ஏன் யாழப்பாணத்தில் இந்தத் தரம் குறைந்த நிலை என காெழும்பிலோ வெளிநாடுகளிலோ வாழ்ந்து விட்டு வருபவர்க்கு மட்டும் கேள்விகள் எழும்.
அதிலும் சோகம் என்னவென்றால் - இவர்களுடைய தவறுகளை-நிறுவனச்சேவைக்குறைபாடுகள் போன்றவற்றை இங்கு வசித்துவரும் வேறு பலரிடம் சொல்லும்போது ”அதனாலென்ன ” என்பதுபோல பார்ப்பதுதான் .
கடந்த 25 வருடங்களாக இப்படியான கலாச்சாரத்திலேயே வாழ்ந்து பழகிப்போய்விட்டது. (அதனால்தான் அப்படியானவர்க்கு இந்தக் கட்டுரை கருத்து உடன்பாடுள்ளதாக இருக்காது .) இரண்டு கோடுகளை ஒப்பிட்டால்தான் எந்தக்கோடு பெரிது என்று தெரியும். தற்போது இங்குள்ளவர்கள் பலர் ஒரு கோட்டையே பார்த்து வாழ்பவர்கள்.

தொடர்ந்து இங்கு வாழ்பவர்களால் வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியாமையால் அவர்களிற்கு குறைகள் பெரிதாகத்தெரிவதில்லை. எனவே யாரிடம் முறையிட்டும் பலனும் கிடைக்காது.
பணம் இருக்கிறது - பணக்கார்கள் என்பவர்களுக்கு அடையாளமாக இருந்த நாகரீகம் இல்லை. பட்டங்கள் இருக்கிறது- பட்டதாரிக்குரிய பண்பு இல்லை. அது ஏன் என்பதே மீண்டும் யாழ்ப்பாணம் வந்த எனக்குப் புரியாத புதிராக இருந்தது.
பல வருடங்களாக காரணம் தெரியாமல் இவர்களைத் திருத்தலாம் என்று பல சமூக சேவைத்திட்டங்களைச் செயற்படுத்தியும் செயற்படுத்துவோர்க்கு என்னாலியன்ற ஆதரவையும் வழங்கி வந்தேன்.பயன் ஒன்றும் இல்லை.
பல வருடங்களாக காரணம் தெரியாமல் இவர்களைத் திருத்தலாம் என்று பல சமூக சேவைத்திட்டங்களைச் செயற்படுத்தியும் செயற்படுத்துவோர்க்கு என்னாலியன்ற ஆதரவையும் வழங்கி வந்தேன்.பயன் ஒன்றும் இல்லை.
இந்தத் தரம் மேம்படாமைக்கு - நான் நேரம் செலவிட்டுக்கொண்டிருப்பது மீதிறன் குறைந்த டீ.என்.ஏக்களிடம் என்பதே காரணம் என்று- இன்றைய இசை அல்பம் பார்த்த ஒரு கணத்தில் புரிந்தது.
பெரும் மகிழ்ச்சி - யுரேகா என்று கத்த வேண்டும் போலுள்ளது.
திறனுள்ள யாழப்பாண மக்கள் இன்னும் வாழ்கிறார்கள். அவர்கள் ஒன்றும் இல்லாமல் போய்விட்ட அன்னப்பட்டசிகள் அல்ல. அவர்கள் இருப்பது நிஜம்.
விதிவசத்தால் மீதிறன் குறைந்த டீ.என்.ஏக்களை கொண்டவர்களிடம் போய்விட்டது இன்றைய யாழ்ப்பாணம்.
ஆனாலும் கவலை வேண்டாம் - யாழ்ப்பாணம் இடம்பெயர்ந்து இன்னும் பல இடங்களில் பழைய தரத்துடனும் மேம்பாட்டுடனும் வாழ்கிறது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .