இந்து சமுத்திரத்தின் ஒரு துளிக் கண்ணீர் போல் இருக்கும் இரத்தம் சிந்திய இலங்கைத்தீவின் யாழ்ப்பாண நகரத்தில் பிறந்தவன் மணிமாறன் எனும் நான். தமிழில் இளநிலைப்பட்டப்படிப்பையும் வர்த்தக முகாமைத்துவத்தில் முதுமாணிப்பட்டப்படிப்பையும் விரும்பிப்ப படித்தவன். கணினியும் கணினி போன்ற கைப்பேசி தொழில் நுட்பங்களும் என்னை அதிகம் கவர்பவை . கவிதை இலக்கியம் என்றும் நாட்டம் அதிகம் ...அதுபற்றித்தானே இங்கு நிறையப்பேசப்போகிறோம்.
இசை,நாடகம்,குறும்படம் என்று என் விருப்பங்களும் தேடல்களும் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. என்னை ஒரே ஒரு துறைக்குள் சிறைப்பிடிக்க வேண்டாம்.
அமரிக்காவின் சிலிக்கன் வலி (Silicon Valley) புதினங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. கல்கியின் பொன்னியின் செல்வனும்தான். சிலப்பதிகாரமும் மணிவாசகனின் திருவாசகமும் பெரும்பாலும் மனப்பாடம். எனது நண்பன் ஸரீபன் பேஸ் புக்கில் சொன்னது போல ”கற்றலும் கற்பித்தலும் தவிர வேறு என்ன இருக்கிறது வாழ்வில்” என்பதை நடைமுறையாகக்கொள்பவன் நான். எ்ன்னுள் இருக்கும் துக்கத்தை பகிர்ந்து கொள்வதைப்போலவே என்னுள் பொங்கும் சந்தோசங்களையும் மற்றவர்க்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் பகிர இந்த அரங்கில் ஏறியுள்ளேன்.
தொடர்புகளிற்கு - 0094777302882 / manimaran101(at)gmail.com
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .