யூனிவேர்சல் லோ ஒப் அற்றாக்சன் சீரிஸ் -01
Law of Attraction in Tamil |
இணையத்தளங்களில் தற்போது பரபரப்பாகவிவாதிக்கப்பட்டும் கொண்டாடப்பட்டும் கொண்டிருக்கும் மனித மன சக்திகள் பற்றிய சுவாரசியமான கலைச்சொல்தான் ”லோ ஒப் அற்றாக்சன்” . ஈர்ப்பு விசையின் விதி -என்று மொழிமாற்றம் செய்து புரிந்து கொள்ளலாம். கலைச்சொற்களை மொழிபெயர்த்துத்தான் பயன்படுத்தவேண்டும் என்ற கட்சிக்கு எதிர்க்கட்சி நான்.
மனதில் ஆழமாக நம்பி-நான் இதை அடைய வேண்டும்-நிச்சயம் அடைவேன், என்று உறுதியாக நம்பி- வேண்டும் பொருளை அல்லது சுகங்களை -வாய்ப்புக்களை நாம் அடையலாம் என்பதுதான் இந்தத் தத்துவத்தின் சாராம்சம்.
இந்த விதிபற்றிய தமது அனுபவங்களை மக்கள் பலர் உரைக்கும் காட்சிகளடங்கிய ”சீக்கிறட்” என்ற வீடியோ யூரியூபில் சக்கைப்போடு போடுகிறது. (அதனது தமிழ் வடிவத்தை இங்கே காணலாம். Video Link )
இப்படியான விடையங்களை விவாதிக்கும் அந்த அரிதான நண்பர்களில் இருவர் இதைப்பற்றி என்னுடன் தம் அனுபவங்களையும் பகிர்ந்தமையும் எனது அனுபவங்களை பகிர வைத்தமையுமான சம்பவங்கள் மனக்குளத்தில் கற்களை விட்டு எறிந்ததில் -அலைகண்ட கடாலாகிப்பரபரக்கிறது சிந்தனைகள்.
Updated: 04-09-2021 (Watch this video !)
வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாடிவிட்டார்-
”எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.”
திண்ணியர் ஆகப் பெறின்.”
இயேசு பிரான் பைபிளில் சொல்கிறார் ”ஒரு மலையைப்பார்த்து அது மெய்யாகிலுமே நகரும் என்று நம்புவாயாகில் அது நகரும்”
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித குலம் அனுபவித்தும் நம்பியும் வரும் உண்மையைத்தான் இன்று புதிதாக அறிந்தது போல இந்த வீடியோக்கள் பார்த்தவர்கள் உணர்கிறார்கள்.
முகாமைத்துவ வகுப்பாகிலும் ஆங்கில வகுப்பாகிலும் எனது வகுப்புக்களில் இந்த விடையங்கள் எப்படியோ என்னால் பேசப்பட்டு விடும்.
எனது மாணவர்களில் ஒருவன் கேட்டான் ”சேர் இந்த வீடீயோ பம்மாத்துத்தானே ? ”
”நினைத்தது எல்லாவற்றையும் அடையலாம் என்றால் விதி என்று ஒன்றே இல்லைத்தானே.?
சரியாகச் சொல்லுங்கள் ”விதி” உண்மையா ? - நினைத்ததை எல்லாம் அடையலாம் என்பது உண்மையா ?
முன்னது உண்மை எனில் பின்னது பொய்யாகிவிடுமே சேர் ?
**********************************
இதற்கான பதில் .......
அதைச் சொல்வதற்கு முன்னர் நான் சொல்வதை ஒரு முறை செய்து விடுங்கள். அடுத்த பகுதியில் நான் இப்பாேது உங்களுக்குச் சொல்லும் செயற்பாட்டுக்கான காரண காரியத்தை விளக்குகிறேன்.
சரி தயாரா ?
உங்கள் கண்களில் ஒன்றை ஒரு தடவை மூடி 5 நொடிகளின் பின்னர் திறவுங்கள். (எந்தக் கண்ணை மூடினீர்கள்என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ...(அடுத்த பகுதியில் மிகுதி)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .