நீங்க என்னவா இருக்கிறீங்கள் ? இப்படித்தான் பெரும்பாலான சந்திப்புக்களின் முதல் பகுதி ஆரம்பிக்கிறது.
( படம்- நன்றி -தினமலர்-தமிழ்நாடு) |
இந்த தொழில்தான் சிறந்தது என்று ஏதாவது இருக்கிறதா ? . அப்படிச்சொல்லும் அப்பாவிகள் பலரைக்கொண்டதுதான் நாம் வாழும் சமூகம். உடம்பின் சிறந்த பாகம் எது என்று கேட்டால் ,கண் என்பீர்களா ? கால் என்பீர்களா ? காது என்பீர்களா ?. உங்கள் பதில் காது என்றால் , நான் உங்கள் கண்களை பிடுங்கியெடுக்கலாமா ? வருந்த மாட்டீர்களா ? .
சமூகம் என்பது தானாகவே ஒரு வட்டத்தை அதனது சமூக அறிவை வைத்துக்கொண்டு போட்டு அதன் உறுப்பினர் ஒவ்வொருவரும் அந்த வட்டத்துக்குள்ளேயே வாழ வேண்டும் என்று நினைப்பது. இங்கே காலம் காலமாக மிக மெதுவாக வளர்ந்து வந்த குழு அறிவுக்கும் நம்பிக்கைகளுக்குமே முதலிடம் . தனிப்பட்ட உறுப்பினர்களின் புதிய சிநதனைகள் கேள்விகளின்றி துாக்கி வீசப்படும்.
யாழ்ப்பாணச் சமூகமும் பல இறுக்கமான கட்டுப்பாடுகளை கோட்பாடாக கொண்டு இருப்பது. சில வகையான விதிகளை மீறலாம் - நீங்கள் புறக்கணிக்கப்டுவீாகள். சில வகையான விதிகளை மீறினால் நீங்கள் தண்டிக்கப்டுவீர்கள்.
அவற்றில் ஒன்று அவர்கள் வகுத்துள்ள சட்டக்கோவைகளின் பிரகாரமான தொழில் துறைகளை ஒரு நபர் தேர்ந்தெடுப்பது.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொழில் பின்வரும் விதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும்.
1) சாகும் வரை அல்லது ஓய்வு காலம் என்று ஒன்று வரும் வரை நிரந்தரமானதாக இருக்க வேண்டும்.
(ஆகவே அரசாங்கவேலைதான் ஒரே ஒரு உத்தம வேலை.)
2)இடமாற்றம் இல்லாதிருப்பது நல்லது.
3)இடையிடையே வீடு வந்து மனைவிக்கு மீன் வாங்கிக்கொடுப்பது போன்ற பணிவிடைகள் செய்யுமளவு நீக்குப்போக்கான வேலை நேரம்
(ஆகவே அரசாங்கவேலைதான் ஒரே ஒரு உத்தம வேலை.)
2)இடமாற்றம் இல்லாதிருப்பது நல்லது.
3)இடையிடையே வீடு வந்து மனைவிக்கு மீன் வாங்கிக்கொடுப்பது போன்ற பணிவிடைகள் செய்யுமளவு நீக்குப்போக்கான வேலை நேரம்
இருக்கவேண்டும்.
4)வேலையில் புதிய மாற்றங்கள் எவையும் வராது சாகும் வரை ஒரே வேலையை திரும்பத் திரும்பசச் செய்யும் படி இருக்க வேண்டும்.
5)ஓய்வூதியம் வரவேண்டும்.
4)வேலையில் புதிய மாற்றங்கள் எவையும் வராது சாகும் வரை ஒரே வேலையை திரும்பத் திரும்பசச் செய்யும் படி இருக்க வேண்டும்.
5)ஓய்வூதியம் வரவேண்டும்.
6)அல்லது அவர்களுக்கு தெரிந்த ஒரு லிஸ்ட்டில் இருக்கக்கூடிய வேலையாக இருக்க வேண்டும்.[Engineer,Doctor ,Teacher,Principal ,peon ,clerk ,office boy, director of education ,asst director of education ,ISA,manager (முன்பு சங்கக்கடை முகாமையாளர்கள் இப்போதெல்லாம் வங்கி முகாமையாளர்கள் etc)
7) வெளிநாட்டு வேலை-ஒரு வருடகாலத்திலேயே பலரும் மாடி வீடுகள் கட்டிய வரலாறு இருப்பதனால் வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் - அங்கு என்ன வேலை செய்தாலும் சரி..யாழ்ப்பாணத்தில் இவர்கள் முகம் சுழிக்கும் வேலையையைும் வெளிநாட்டில் செய்யலாம் . அதற்காக அற மீறல்களாகிய கள்ளப்பாஸபோர்ட் , தலை மாற்றுதல் ,ஏஜன்சியுடன் பெண்களை -குறிப்பாக மணப்பெண்களை அனுப்புதல் ..பொய்க்கு வெளிநாட்டு குடியுரிமையுள்ள நபரை இங்குள்ள ஒருவருக்குத்திருமணம் செய்து வைத்து அனுப்புதல் போன்ற எதை வேண்டுமானாலும் செய்யலாம்.(அந்த சேவைக்கு அந்த வெளிநாட்டு நபருக்கு இருபது இலட்சம் ரூபா வரை வழங்கப்படும்)
எப்படியோ வெளிநாடு போனால் அந்த நாட்டின் பெயரையே உத்தியோகத்தின் பெயராக்கிவிடுவார்கள். திருமண அழைப்பிதழ்கள் மரண அறிவித்தல்களி்ல குமாரவேல்(ஆசிரியர் ) என்று போடுவது போல் , லக்ஸ்மன்(கனடா),சீராளன் (சுவிஸ்) என்று போடுவார்கள்.

இவையெல்லாம் யாழ்ப்பாண சமுதாயத்தில் ஒரு ஆணுக்குரிய நல்ல வேலைகள்.(2014 )
மேற்குறித்த எந்த ஒரு வேலையும் செய்யாது
சுயதொழில் செய்து வாழும் என்னை பல பெரியவர்கள்..தம்பி டிகிறி முடித்து இவ்வளவு காலமாகியும் இன்னும் ஒரு வேலை கிடைக்கவில்லை த்தானே என கேட்டதுண்டு.
சுயதொழில் செய்து வாழும் என்னை பல பெரியவர்கள்..தம்பி டிகிறி முடித்து இவ்வளவு காலமாகியும் இன்னும் ஒரு வேலை கிடைக்கவில்லை த்தானே என கேட்டதுண்டு.
இன்று வரை ஏதாவது ஒரு பெரிய கம்பனியில் வேலைக்குப்போ அல்லது கம்பஸில் படிப்பிக்கப்போ என்று அறிவுரை (கேக்காமலே) சொல்லும் நான் பல வகையிலும் மதிக்கும் அறிஞர்களும் உண்டு..
உண்மையில் வேலை என்பது என்ன ? அது உங்களுக்கு தரவேண்டியது எதை ? எது உங்கள் வெற்றிகரமான வேலைக்கு அளவுகோல் ? நான் பார்க்கும் வேலை என்ன ?அடுத்த பகுதியில்...
உண்மையில் வேலை என்பது என்ன ? அது உங்களுக்கு தரவேண்டியது எதை ? எது உங்கள் வெற்றிகரமான வேலைக்கு அளவுகோல் ? நான் பார்க்கும் வேலை என்ன ?அடுத்த பகுதியில்...
HATS OFF!
ReplyDeleteintha mathiri artical parthaal naa konjo gaand aagiduven samoogam mela.....!!!
thodarnthu pathiyungal!
WE SUPPORT U SIR! <3