Tuesday, April 21, 2015
கனவைத் துரத்தும் நாய்கள்.
கனவிலும்
நனவிலும்
எ்னைச் சுற்றி ஊளையிட்டுத்திரியும்
ஒரு கூட்டம் நாய்கள்.
நான் ஒன்றும் மணிவாசகர் இல்லைத்தான்
எனினும..
எனைச்சுற்றி நடப்பது என்னவோ
நரிகளைப் பரிகளாக்கிய கதைதான்.
இந்த
உயிரின் ஆழம் வரை செல்லும் ஊளை.
நாய்களுக்குரியதல்ல.
இது நடுக்காட்டில் எங்கோ
பிணம் தின்று கொழுத்த பேய்கள் மொழி.
பேய்களைப்பிடித்து நாய்களாக்கியது யார்.
என் மனசில் இப்போதெல்லாம் துழாவும் ஒற்றைக் கேள்வி இதுதான்.
பல வேளைகளில்..
நாய்க்கும் நரிக்கும் பிறந்த கலப்பு இனம்போலும் தெரியும்.
அவை ஒன்று, இரண்டல்ல, எண்ணிற் பல.
ஒன்று , எனது வேகமான நடைகளின் போது காலை இடறி ஓடும்.
இன்னொன்று ,
நடக்கும் போது கூடவே வரும்.
குறிப்பறிவது போல் கொள்ளிக் கண்களை விரித்து
என்மனதை வேவு பார்க்கும்.
சில வேளை இரண்டு இணைந்து நான் உட்காரும் முன்னே என் ஆசனங்களில் சிறுநீர் கழிக்கும்.
அவற்றில் ஒன்று உடலால் உராய்ந்து என் சுற்றுப்புறங்களை
சுத்தம் செய்வதாய் பாவ்லா காட்டுவதும் உண்டு.
விலகிக் கண்மூடின்
என்
கனவுகளில்
எப்போதும் வரும் அதே ஒற்றைப் பனைக் காட்டில்
ஓலமிட்டு
நான் ஓட
பின்னால்
இவற்றில் சில.
என் நன்மைக்காக இந்த சாத்தான்களை
இங்கே அனுப்பியதாய்
அசரீரி கேட்டது ஒரு நாள்.
நான் நம்பவில்லை
தேவ வசனங்களை எந்த சாத்தான்
எப்படித்தான் ஓதினாலும்
அது
திறக்கப்போவது என்னவோ
நரகத்தின் வாயிலைத்தான்.
அழையாமல் வந்த
இநத அசிங்கப் பிறவிகள்
அடிக்கடி கடித்ததில்
கிழிந்து தொங்குகிறது
அழுக்குத்துணியாக
என்
தனிமனித வாழ்வு.
Wednesday, February 4, 2015
பிறத்திகளிற்கு என்ன கவலை !
உயிர்போனாலும்
தம்பார்வையில் தம்பிக்கு இதுதான் நல்லது
என்று
வெம்பியவன் மனக்கடலின் துளியளவின்
துளி
கரிக்குமா ,இனிக்குமா
எனத்தெரியாமலே
சிலாகிக்கும்
ஒரு கூட்டம்.
பக்குவம் செய்வதாய்
சொல்லி
சட்டியில் கிளறி
அடுப்பில் போட்டகதை
எந்த உறவும் இடை
வெளிகளிற்குட்பட்டதே.
தெரியாமல்
தனிமனித வாழ்வில்
தடியோடு புகுந்தது பிறத்தி.
அடித்த அடியில்
விழுந்த பிணங்கள் மூன்று
நான்கு.
அரைவேக்காடுகளின் அவசரத்திட்டம்
முள்ளில் விழுந்த சீலையை
மூர்க்கமாய்
இளுத்த அணி.
சிகிச்சை வெற்றி
சீக்காளி போய்ச்சேர்ந்தான்.
இந்த பரிசோதனை
முடிவுகளில்
வெற்றியில்லாதது
வேதனையில்லை.
அடுத்த(வன்) சோதனையில் அவை திருத்தப்படும்.
பிறத்திகளிற்கு என்ன கவலை
வீழ்ந்த
பிணங்களைப்பற்றி.
Wednesday, January 21, 2015
சுன்னாகம் கழிவொயில் பிரச்சினை -உண்ணாவிரதப்போர் தேவையா இப்போ ?
என்ன காரணத்துக்காக நிலத்தடி நீர் மாசிற்கெதிரான இப்போராட்டம் மிக மிக அவசியமும் அவசரமும்.
20-01-2015 காலை 8.30 இலிருந்து பருத்தித்துறை பிரதேச வைத்திய அதிகாரி டாக்டர் க.செந்துாரன் தலமையிலான வைத்தியர்கள் உள்ளிட் பொதுமக்கள் நிலத்தடி நீரில் கழிவொயில் கலப்பதற்கு எதிரான தொடர் உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
1)இன்னும் பல்லாயிரக்கணக்கான லீட்டர் கழிவொயில் தினசரி சுன்னாகம் மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து விடப்பட்டுக்கொண்டிருக்கிறது.
4) யாழ் நகரப்பகுதிகளில் இன்னும் சில வாரங்களில் கழிவு ஒயில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கழிவொயில் பாதிப்புக்கள் - சில முக்கிய உண்மைகள்
1) இதிலுள்ள ஆசனிக் எனும் நச்சுப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும்.
2)இதில் உள்ள ஈயம் இலகுவில் உடலில் கல்நது உறுப்புச்செயற்பாட்டு குறைபாடுகளைய ஏற்படுத்தும் அதே வேளை மூளை வளர்ச்சி குறைந்த பிள்ளைகள் பிறக்க ஏதுவாகும்.
6)நகர சபை ,நீர் வடிகாலமைப்பு சபையினால் குடிநீர் விநியோகம் மட்டுமே நடைபெறுகிறது எனவே விவசாயம்,குளித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு மக்கள் என்ன செய்வார்கள்.?
7) பொறுத்திருக்கும் ஒவ்வொரு நாளும் மண்ணும் சூழலும் விசமாகிக்கொண்டே செல்கிறது.
(ஆம் சந்தேகத்திற்கிடமின்றி . மின்னல் வேகத்தில் நடவடிக்கைகள் தேவை . )
20-01-2015 காலை 8.30 இலிருந்து பருத்தித்துறை பிரதேச வைத்திய அதிகாரி டாக்டர் க.செந்துாரன் தலமையிலான வைத்தியர்கள் உள்ளிட் பொதுமக்கள் நிலத்தடி நீரில் கழிவொயில் கலப்பதற்கு எதிரான தொடர் உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
இது மக்களுக்காக நல்ல நோக்கோடு முன்னெடுக்கப்படும் போர். எனினும் அவசரம் அவசரமாக சொந்த செலவில் ரூம் போட்டு இந்தப்போராட்டத்தினால் இவர்களுக்கு என்ன நன்மை ? யாராவது காசு கொடுத்திருப்பார்களா ? ஏதாவது தண்ணீர் போத்தல் கம்பனி ஸ்பொண்சர் பண்ணுகிறதா ? என்று இதில் குறை கண்டுபிக்க - உதவி செய்யவிட்டாலும் உபத்திரவம் செய்யவென்றே வாழும் நம்ம ரிப்பிக்கல் யாழ் தமிழனுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்.)
1)இன்னும் பல்லாயிரக்கணக்கான லீட்டர் கழிவொயில் தினசரி சுன்னாகம் மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து விடப்பட்டுக்கொண்டிருக்கிறது.
2)வழமையான அரசியல் பாணி நகர்வுகளினால் நத்தை வேகத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய காரியம் இதுவல்ல என்பதை இதன் பாதிப்புக்களை கற்றறிந்தவர்கள் உணர்வார்கள்.
3)ஆரம்பத்தில் மின்னிலையத்தின் அயலில் உள்ள கிணறுகளில் தென்பட ஆரம்பித்த கழிவு ஒயில் ,படி்ப்படியாக சுண்ணாகம் பிரதேசம்,சில வாரங்களில் மல்லாகம் ,தெல்லிப்பளை என்று ஒரு திசையில் சென்று ,தற்போது இணுவில் மற்றும் தாவடிப்பகுதிகளில் நுழைந்து விட்டது.
4) யாழ் நகரப்பகுதிகளில் இன்னும் சில வாரங்களில் கழிவு ஒயில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5)வடமாகாண நீர் வடிகாலமைப்புச் சபை நடாத்திய ஆய்வின்படி யாழ்ப்பாணத்தில் மூன்று நிலத்தடி நீர்ப்படுக்கைகள் காணப்படுகின்றன (யாழ்,சாவகச்சேரி,வடமராட்சியை பிரதேசங்களாக கொண்டவை ). அதில் பெரியதும் யாழ் நகரை உள்ளடக்கியதுமான நீர்ப்படுக்கையே தற்போது மாசடைந்துள்ளது. ஒரு குளம் நிலத்தின் கீழ் இருப்பதாக கற்பனை செய்து கொண்டால் அதில் விடப்பட்ட நீர் எப்படி படிப்படியாக அதன் சகல பகுதிகளிற்கும் பரவுகிறதோ அவ்வாறே இந்த நித்தடி கழிவு ஒயில் எமது பிரதான நன்னீர்ப்படுகையில் பரவுகிறது.
6) ஏற்கனவே பல குழுவினரால் சட்ட நடவடிக்கைள் எடுக்கப்ட்டுள்ளன ,மல்லாகம் நீதிமன்றில் பல வழக்குகள் நொதேர்ண் பவர் நிறுவன்திற்கு எதிராக போடப்பட்டுத்தான் இருக்கிறது. இலங்கை போன்ற நாடுகளில் சட்ட ரீதியான தீர்வுகளைப்பெற எடுக்கும் காலம் , இந்த கழிவொயில் யாழ்ப்பாணம் முழுதிற்கும் பரவி பல தலைமுறைகளை அழிக்கும் செறிவில் நிலைத்திட போதுமானதொன்று.(எனவே தயவு செய்து இன்னும் கொஞ்சக்காலம் உட்கார்ந்து பேசியிருக்கலாம் என்று சொல்லி முயற்சிகளிற்கு முட்டுக்கட்டை போடாதீர்கள்.)
7)பெரும் மக்கள் திரள் கண்டால் உடனடித்தீர்வு வரும். எனவே கழிவு ஒயில் கலப்பால் பாதிக்கப்பட்டுள்ள 2000 கிணறுகளின் உரிமையாளர்களில் பாதிப்பேராவது போராட்டம் நடைபெறும் இடத்திற்கு உடன் வருகை தருவதும் மற்வர்களையும் கலந்து கொள்ளச்செய்வதும் இன்றைய காலத்தின் கட்டாயம் . கடமை.
கழிவொயில் பாதிப்புக்கள் - சில முக்கிய உண்மைகள்
1) இதிலுள்ள ஆசனிக் எனும் நச்சுப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும்.
2)இதில் உள்ள ஈயம் இலகுவில் உடலில் கல்நது உறுப்புச்செயற்பாட்டு குறைபாடுகளைய ஏற்படுத்தும் அதே வேளை மூளை வளர்ச்சி குறைந்த பிள்ளைகள் பிறக்க ஏதுவாகும்.
3)இந்த தண்ணீரை குடிக்க மட்டுமன்றி விவசாயத்துக்கோ
அல்லது கால்நடைகளிற்கோ கூட கொடுக்கலாகாது. இந்த நீரில் விளை்நத
தேங்காயில்,இந்த நீர் குடித்த கோழி முட்டையில்,பசுவின் பாலில் கூட 100
வீதம் உத்தரவாதமாய் இந்த கொடிய நஞ்சுகள் இருக்கும் .
4)குறிப்பாக
சொல்லப்போனால் பாரிய விவசாயப்பிரதேசமான
சுண்ணாகம்,மல்லாகம்,தெல்லிப்பளை,இணுவில்(தற்போது அங்கும் ஒயில் சென்று
விட்டது)போன்ற பகுதிகளில் விளையும் உணவுப்பொருட்கள் எவையுமே பாதுகாப்பற்றவை
என்ற நிலை. என்ன கொ:டுமை.
5)இந்நீரில் குளித்தல்கூட தோல்புற்று உட்பட்ட பாரிய நோய்களை தோற்றுவிக்கும் 6)நகர சபை ,நீர் வடிகாலமைப்பு சபையினால் குடிநீர் விநியோகம் மட்டுமே நடைபெறுகிறது எனவே விவசாயம்,குளித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு மக்கள் என்ன செய்வார்கள்.?
7) பொறுத்திருக்கும் ஒவ்வொரு நாளும் மண்ணும் சூழலும் விசமாகிக்கொண்டே செல்கிறது.
Wednesday, January 7, 2015
பொருந்துவன போவென்றாலும் போகா ! - விதி பற்றிய எனது புரிதல்
நீங்கள் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவராக பிறந்தாலும்,சகல சுக போகங்களுடனும் வளர்ந்தாலும் ,உங்களைச்சுற்றி பல நல்லவர்கள் உங்களில் அக்கறையுடன் இருந்தாலும், தொழில் துறையில் பல சாதனைகளைப்புரிந்து மற்றோர் கணிப்பில் வெற்றியாளனாகத் திகழ்ந்தாலும். ... இன்னும் நெஞ்சை அரித்துக்கொண்டிருக்கும் ஒரு வேதனை அல்லது தேடல் அல்லது திருப்தியின்மை இருக்கிறதென்றால் (அதை நிறைவே்ற்றும் வழி தெரிந்திருந்தும்) நீங்கள் நிச்சயமாய் விதியின் அதிக அக்கறைக்கு உள்ளாகியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களிற்கு சில பூட்டுக்களின் சாவிகள் கிடைக்க காத்திருக்கின்றன என்று பொருள்.
படித்தால் நல்லது ,வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரலாம் என்பது ஒரு இளைஞனுக்கு தெரிந்த விடையம்தான். ஆனால் அவன் நண்பர்களுடன் கிறிக்கெட் விளையாடும் பொழுது தந்தை திடீரென காதைப்பிடித்து இழுத்து வந்து படிக்கும் மேசையில் விட்டு கவனமாய் படி என்றால்...அவனது மனம் அந்த விளையாட்டு பூர்த்தியடையாமை குறித்து எவ்வளவு வருந்தும் . அவனது நரம்பு நாடிகளில் அவை புடைக்கிற அளவிற்கு கூட அந்த இழப்பின் வலி தோன்றலாம்.
இந்த படிப்பிற்காய்தான் என் விளையாட்டு கலைக்கப்பட்டது என்பது தெரிந்தும் படி்ப்பை வெறுக்க முடியாமலும் விளையாட்டைத் தொடர முடியாமலும் - விளையாடி முடித்து வந்திருக்கலாமே என்று அங்கலாய்க்கும் மன நிலை உங்களுக்கு தொன்றியிருக்கிறது என்றால்...அது விதி. முற்கூட்டிய ஏற்பாடு.
உங்கள் ஆசைகள் எவ்வளவு நியாயபபூர்வமாக இருந்த போதிலும் அந்த அனுபவத்திற்கு உரிய காலமோ ,விதியோ இல்லாவிடின் அது கிடைப்பதில்லை. வெறும் புத்திக்கும் ,திட்டமிடலுக்கும் மட்டுமே வெற்றிகள் கிடைப்பதாகக்கொண்டால், படிப்பிலும், வாழ்திறன்களிலும் மிகுந்த புத்திசாலிகள் மட்டுமே வாழ்வில் பொருளாதார , குடும்ப நிலை அடிப்படைகளில் பெரும் உயர்வில் இருக்க வேண்டும் . . ஆனால் முப்பதிற்கு மேல் வாழ்ந்த நம்மில் பலருக்கு எப்போதும் கெட்டிக்காரர்களே வெல்வதில்லை என்பது அனுபவ ரீதியாகத்தெரியும்.
வியாபாரம் செய்யத்தெரியாத பலர் அந்த துறைகளில் கொடிகட்டிப்பறக்கிறார்கள். மிகத்திட்டமிட்டு வியாபாரம் செய்தும் கவிழ்ந்து போகிறார்கள் சிலர். உப்பு விற்பதை நீங்கள் திட்டமிடலாம்.ஆனால் அந்த இடத்தில் மழைகொட்டி நாசமாக்குவதையோ வெயிலடித்து தொந்தரவற்று இருப்பதையோ உங்களால் தீர்மானிக்க முடியுமா ? . கடற்கரையில் கோடிக்கணக்கான முதலீட்டில் காற்றாலைகளை ஒரு நிறுவனம் நிறுவி அடுத்த வாரமே சுனாமியில் அந்த இடமே அடையாளம் தெரியமால் அழியும் போது வென்றது அவர்களது திட்டமிடலா அல்லது விதியா ?.எதுவென்பது ?
எனக்கு தெரிந்த ஒரு வர்த்தகர் இருக்கிறார் ,அவரது தந்தை விட்டுச்சென்ற வர்த்தகத்தொழிலை அவர் செய்கிறார். பெரும் கோடீஸ்வரன். அவரிடம் வேலை செய்யும் பெரும்பாலான உதவியாளர்கள் அவ்வப்போது 50 லட்சம் 10 லட்சம் என்று காசை சுருட்டிக்கொண்டு கம்பி நீட்டுவதுண்டு. அந்தளவிற்கு இலகுவில் மற்றவர்களை நம்பும் குணமும் ,இறுக்கமான நிர்வாகக்கட்டமைப்பு இல்லாமையும் உள்ளவர் அவர். ஆனாலும் அவர் வீழ்நது போய்விடவில்லை வளர்ந்து கொண்டே இருக்கிறார். பல தமிழ் விழாக்களிலும் அவரைக்காணலாம். எப்போதும் சிரித்த முகம். வியாபரம் எப்படிச்செய்வது என்று தெரியாமலே கோடிகளைக் குவிக்கிறார். இத்தனைக்கும் இவர் பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்காதவர். எனது நண்பர்கள் பலர் நன்றாகப்படித்து ,சந்தை ஆய்வு,கள ஆய்வு செய்து,திட்டமிட்டு செய்த பல வியாபார நடவடிக்கைகள் அவர்களை பெரும் கடனாளிகளாய் மட்டுமே ஆக்கியுள்ளது.

முயற்சி மட்டுமே நம்முடையதாகிறது. கூலியின் அளவைத்தீர்மானிப்பதும் வழங்குவதும் வழங்காது விடுவதும் வேறு யாருடையதோ கைவசம் இருப்பதாய் படுகிறது.
இந்த அனுபவம் நம்மில் அனைவருக்கும் உண்டு. சிலர் அதனை கவனிக்காது விடுகிறார்கள் .அவ்வளவே.
"கடமையைச்செய் பலனை எதிர்பார்க்காதே" என்ற பகவத் கீதையின் வரிகள் இவ்வாறான சில அனுபவங்களின் பின்னரே புரிய ஆரம்பிக்கிறது. ஒரு மாணவனின் கடமை படிப்பது. பரீட்சைக்காலத்தில் அதற்குரிய பாடத்திட்டத்திற்கமையப் படிப்பது. விழங்கிய அளவில் படிப்பது. விழங்காததை விழங்க முயற்சிப்பது . பரீட்சை எழுதுவது. அவ்வளவே. பெறுபேறு 10 புள்ளிகள் என்றாலும் 90 புள்ளிகள் என்றாலும் அதைப்பற்றி கலங்க ஒன்றுமில்லை. அவன் எல்லா முயற்சியும் செய்தும் இந்தப்புள்ளிதான் வந்ததென்றால் அவ்வளவு தான்.
ஒவ்வொரு தொழிலுக்கும் , முயற்சிக்கும் என்றிருக்கும் கடமைகளை செய்வோம் . தலைகீழாய் முயற்சி செய்கிறேன் என்ற அளவிற்கு சென்று முயற்சிப்பதும் சரியே ஆனால் பெறுபேற்றில் உங்கள் மனம் முழுவதையும் விட்டு விடாதீர்கள்.
இதனை காதலை வைத்துக்கூட அருமையாக விழங்க முடியும். நான் பதினாறுகளில் ஆரம்பித்து 19 வரை ஒரு தலைப்பட்சமாக ஒரு பெண்ணை காதலித்து வந்தேன். பல்கலைக்கழக அனுமதி பெற்றதும் கொஞ்சம் தைரியம் வந்து இன்னொரு நபர் மூலம் துாது விட்டேன் ” அவன் அவளிடம் சென்று கேட்டான் ” ” நீங்கள் மணிமாறனைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” ,அவள் சொனனாள் ”ஒன்றும் நினைக்கவில்லை” . முடிந்தது என் மூன்று வருடக் காதல். நேரில் கேட்க தைரியமில்லை ஏனென்றால் முடிவு என்னாகுமோ எனற பயம். முடிவு பற்றியே கவலை. காதலை முறைப்படி சொல்வதைப்பற்றி சிந்திக்கவில்லை.
மாணவர்களிற்கு ஆங்கிலம் கற்பிக்கும்போது ஓர் கதை வரும். அதில் ஒரு நண்பன் ஒரு இரவு விடுதியில் வைத்து பெண்கள் என்றாலே அணுகப்பயப்படும் தன் நண்பனிடம் சொல்லுவான். ”அதோ அந்தப்பெண்ணிடம் போய் அவள் உண்ணும் கோழி இறைச்சி துண்டில் ஒன்றை எடுத்து உண்ணு...அவள் உன்னை ஆச்சரியமாகப்பார்ப்பாள் உடனே .”நீங்கள் அழகாய் இருக்கிறீர்கள் அதுதான் இந்த கோழி இறைச்சி நீங்கள் உண்ணும் அளவு பாதுகாப்பானதுதானா என்று சோதித்துப்பார்த்தேன் ” எனச்சொல்லு..உன் நகைச்சுவை அவளிற்கு பிடிக்கும் அவள் உன்னுடன் உரையாட ஆரம்பிப்பாள். மாறாக அப்படி நடக்கவில்லை அவள் கோபமடைந்துவிட்டாள் என்றால் ” ஆம் இந்த செயற்பாடு தவறுதான் என்று சொல்லிவிட்டு வந்து விடு . இதை விட வேறு என்ன மோசமாக நடந்துவிடக்கூடும். நம் விதி என்ன என்று தெரியாதபோது கடமையை ஆற்ற மட்டும்தானே எமக்கு அதிகாரம் இருக்கிறது ? முடிவில் இல்லை அல்லவா ? எனவே வருந்த எதுவுமே இல்லை.
இதை முதன் முதல் படிப்பிக்கும்போதுதான் என் மூளையில் பளிச்சிட்டது ” அட, காதலிப்பதை தயங்காமல் அந்தப் பெண்ணிடம் சொல்லியிருக்கலாம் பிடித்திருந்தால ஆம் என்கிறாள் இல்லை என்றால் மறுக்கப்போகிறாள் வேறு என்னதான் நடந்து விடும். இது ரொம்ப இலகுவான அணுகுமுறை. காதல் வந்தால் அதைச்சொல்லுவது கடமை பலன் என்னவாகவும் இருக்கலாம். எனக்கு இது காலம் பிந்திய ஞானம் . ஆனால் இதை வாசிக்கும் பலருக்கு பயனளிக்கலாம்.

ஆக, கன்மவிதி என்பது எமது செயல்களால் (இந்தப்பிறவி மற்றும் போன பிறவிகள்)எமக்கு ஏற்றப்படும் சுமை. ஏற்கனவே ஏற்றிய சுமையுடன் இன்னும் இன்னும் ஏற்றிக்கொண்டே செல்கிறோம். பொன்னாக இருந்தாலென்ன குப்பையாக இருந்தாலேன்ன தோளில் ஏற்றப்பட ஏற்றப்பட சுமைதானே அதிகரிக்கும் . நல்வினை தீவினை இரண்டுமே பாரங்கள்தான். பாரம் குறைக்க பெரியவர்கள் கூறும் வழி எதைச்செய்தாலும் விருப்பு வெறுப்பின்றி செய்க அவ்வாறு செய்யின் அதனால் வரும் கர்ம வினை வராது(கீதை) இதை பூரணமாக முடியாவிட்டாலும் படிப்படியாகவேனும் கடைப்பிடிக்க ஆரம்பிக்கலாம்.
சுக போகங்களை அனுபவிக்கத்துடிக்கும் மனசுடைய நாம் அனைத்துக்கருமங்களையும் எதிர்பார்ப்பற்று செய்வது மிகச்சிரமம். முடியுமான தருணங்களில் பற்றற்று காரியமாற்றிப் பழகுவோம். காலம் செல்லச்செல்ல அதுவே ஒரு வழிபாடாகிவிடும்.

விதியை மதியால் வெல்லலாமா ?.விதியை தெரிந்து கொள்ளும் ஒரு முயற்சிதான் சோதிடக்கலை. பரிகாரங்களும் சில முற்கூட்டிய ஏற்பாடுகளும் நம் விதியை மாற்றப்பயன்படுமா ? கிரியைகள் உண்மையா ? மந்திரங்கள் ஏன் ? கோவில் ஏன் ,விக்கிரகங்களால் பயன் உண்டா ?
இவை பற்றிய சிந்தனைகளும் சில பற்றிய ஓரளவு தெளிவும்தான் எனது தற்போதைய மனநிலை , விதி ஏவின் விரைவில் எழுதுவேன்.
விதியில் கூட எமக்கு தெரிவு செய்யும் வசதி இருக்கிறது என்று ஓஷோ சொன்னதைப்படித்தபோது மிக வியப்பாய் இருந்தது , அந்த உதாரண அழகு.(அடுத்த பகுதியில்)
Subscribe to:
Posts (Atom)
Featured Post
அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences
இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...
அதிகம் படிக்கப்பட்டவை
-
”பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றாள் அவ்வைப்பாட்டி. நமது தினசரி வாழ்வில் பல விதமாக பிச்சை எடுக்கும் கற்றவர்களைக் காண்கிறோம். நேற்ற...
-
This article summarizes the dark side of using VPN(Virtual Private Network)services for free. How your privacy could be on risk? and, wh...
-
அம்புலிமாமா எனும் அரும்பெரும் பொக்கிஷத்தை என் சமவயதில் பயணிப்பவர்களால் பெரும்பாலும் மறந்திருக்க முடியாது.” வட்ஸ் அப்பும்”, ” வைபரும்”, ” பே...
-
யூனிவேர்சல் லோ ஒப் அற்றாக்சன் சீரிஸ் -01 Law of Attraction in Tamil இணையத்தளங்களில் தற்போது பரபரப்பாகவிவாதிக்கப்பட்டும் கொண்ட...
-
நல்ல டீ.என்.ஏ க்களின் இடப்பெயர்வின் விளைவே இன்றைய யாழ்ப்பாணம். லண்டனிலும்,கனடாவிலும்,கொழும்பில் வெள்ளவத்தையிலும் இன்னும் பெருமைமிகு...
-
என் வகுப்புக்கு மேற்பட்ட பாடசாலை விஞ்ஞானப் புத்தகங்களை வாசித்து அவற்றிலிருந்த பரிசோதனைகளைச் செய்து வருவதாலும்...பழைய ட்றங்குப் பெட்டி...
-
மணிவாசகர் நரிகளைப் பரிகளாக்கிய கதையினை நானும் அரங்கேற்றினேன் அப்போது எனக்கு வயது 13. ஏழாம் வகுப்பு படிக்கும் போது மீன் வளர்ப்பி...
-
ஆறாம் வகுப்பிலே கொமிக்ஸ் புத்தகங்கள்(சித்திரக் கதைப்புத்தகங்கள்)பரிமாறிக்கொள்வதிலிருந்து அறிமுகமாகி திடீரென நண்பனானவன் மதன். புலமைப்பரிசில்...
-
ஓ.எல் பரீட்சை முடிந்ததும் கூவிக் கூவிப் பிள்ளை பிடிக்கப்போகும் ரியூசன் மார்பியாக்களிடமிருந்து எங்கள் பிள்ளைகளைக் காத்தருளுங்கள். Plea...
-
-பிஞ்சிலே பழுத்தது- மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன் அப்போது தான் தொலைக்காட்சியில் நைட் றைடர் , மற்றும் பல விண்வெளி சம்ப...