(ஆம் சந்தேகத்திற்கிடமின்றி . மின்னல் வேகத்தில் நடவடிக்கைகள் தேவை . )
20-01-2015 காலை 8.30 இலிருந்து பருத்தித்துறை பிரதேச வைத்திய அதிகாரி டாக்டர் க.செந்துாரன் தலமையிலான வைத்தியர்கள் உள்ளிட் பொதுமக்கள் நிலத்தடி நீரில் கழிவொயில் கலப்பதற்கு எதிரான தொடர் உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
இது மக்களுக்காக நல்ல நோக்கோடு முன்னெடுக்கப்படும் போர். எனினும் அவசரம் அவசரமாக சொந்த செலவில் ரூம் போட்டு இந்தப்போராட்டத்தினால் இவர்களுக்கு என்ன நன்மை ? யாராவது காசு கொடுத்திருப்பார்களா ? ஏதாவது தண்ணீர் போத்தல் கம்பனி ஸ்பொண்சர் பண்ணுகிறதா ? என்று இதில் குறை கண்டுபிக்க - உதவி செய்யவிட்டாலும் உபத்திரவம் செய்யவென்றே வாழும் நம்ம ரிப்பிக்கல் யாழ் தமிழனுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்.)
1)இன்னும் பல்லாயிரக்கணக்கான லீட்டர் கழிவொயில் தினசரி சுன்னாகம் மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து விடப்பட்டுக்கொண்டிருக்கிறது.
2)வழமையான அரசியல் பாணி நகர்வுகளினால் நத்தை வேகத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய காரியம் இதுவல்ல என்பதை இதன் பாதிப்புக்களை கற்றறிந்தவர்கள் உணர்வார்கள்.
3)ஆரம்பத்தில் மின்னிலையத்தின் அயலில் உள்ள கிணறுகளில் தென்பட ஆரம்பித்த கழிவு ஒயில் ,படி்ப்படியாக சுண்ணாகம் பிரதேசம்,சில வாரங்களில் மல்லாகம் ,தெல்லிப்பளை என்று ஒரு திசையில் சென்று ,தற்போது இணுவில் மற்றும் தாவடிப்பகுதிகளில் நுழைந்து விட்டது.
4) யாழ் நகரப்பகுதிகளில் இன்னும் சில வாரங்களில் கழிவு ஒயில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5)வடமாகாண நீர் வடிகாலமைப்புச் சபை நடாத்திய ஆய்வின்படி யாழ்ப்பாணத்தில் மூன்று நிலத்தடி நீர்ப்படுக்கைகள் காணப்படுகின்றன (யாழ்,சாவகச்சேரி,வடமராட்சியை பிரதேசங்களாக கொண்டவை ). அதில் பெரியதும் யாழ் நகரை உள்ளடக்கியதுமான நீர்ப்படுக்கையே தற்போது மாசடைந்துள்ளது. ஒரு குளம் நிலத்தின் கீழ் இருப்பதாக கற்பனை செய்து கொண்டால் அதில் விடப்பட்ட நீர் எப்படி படிப்படியாக அதன் சகல பகுதிகளிற்கும் பரவுகிறதோ அவ்வாறே இந்த நித்தடி கழிவு ஒயில் எமது பிரதான நன்னீர்ப்படுகையில் பரவுகிறது.
6) ஏற்கனவே பல குழுவினரால் சட்ட நடவடிக்கைள் எடுக்கப்ட்டுள்ளன ,மல்லாகம் நீதிமன்றில் பல வழக்குகள் நொதேர்ண் பவர் நிறுவன்திற்கு எதிராக போடப்பட்டுத்தான் இருக்கிறது. இலங்கை போன்ற நாடுகளில் சட்ட ரீதியான தீர்வுகளைப்பெற எடுக்கும் காலம் , இந்த கழிவொயில் யாழ்ப்பாணம் முழுதிற்கும் பரவி பல தலைமுறைகளை அழிக்கும் செறிவில் நிலைத்திட போதுமானதொன்று.(எனவே தயவு செய்து இன்னும் கொஞ்சக்காலம் உட்கார்ந்து பேசியிருக்கலாம் என்று சொல்லி முயற்சிகளிற்கு முட்டுக்கட்டை போடாதீர்கள்.)
7)பெரும் மக்கள் திரள் கண்டால் உடனடித்தீர்வு வரும். எனவே கழிவு ஒயில் கலப்பால் பாதிக்கப்பட்டுள்ள 2000 கிணறுகளின் உரிமையாளர்களில் பாதிப்பேராவது போராட்டம் நடைபெறும் இடத்திற்கு உடன் வருகை தருவதும் மற்வர்களையும் கலந்து கொள்ளச்செய்வதும் இன்றைய காலத்தின் கட்டாயம் . கடமை.
கழிவொயில் பாதிப்புக்கள் - சில முக்கிய உண்மைகள்
1) இதிலுள்ள ஆசனிக் எனும் நச்சுப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும்.
2)இதில் உள்ள ஈயம் இலகுவில் உடலில் கல்நது உறுப்புச்செயற்பாட்டு குறைபாடுகளைய ஏற்படுத்தும் அதே வேளை மூளை வளர்ச்சி குறைந்த பிள்ளைகள் பிறக்க ஏதுவாகும்.
3)இந்த தண்ணீரை குடிக்க மட்டுமன்றி விவசாயத்துக்கோ
அல்லது கால்நடைகளிற்கோ கூட கொடுக்கலாகாது. இந்த நீரில் விளை்நத
தேங்காயில்,இந்த நீர் குடித்த கோழி முட்டையில்,பசுவின் பாலில் கூட 100
வீதம் உத்தரவாதமாய் இந்த கொடிய நஞ்சுகள் இருக்கும் .
4)குறிப்பாக
சொல்லப்போனால் பாரிய விவசாயப்பிரதேசமான
சுண்ணாகம்,மல்லாகம்,தெல்லிப்பளை,இணுவில்(தற்போது அங்கும் ஒயில் சென்று
விட்டது)போன்ற பகுதிகளில் விளையும் உணவுப்பொருட்கள் எவையுமே பாதுகாப்பற்றவை
என்ற நிலை. என்ன கொ:டுமை.
5)இந்நீரில் குளித்தல்கூட தோல்புற்று உட்பட்ட பாரிய நோய்களை தோற்றுவிக்கும் 6)நகர சபை ,நீர் வடிகாலமைப்பு சபையினால் குடிநீர் விநியோகம் மட்டுமே நடைபெறுகிறது எனவே விவசாயம்,குளித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு மக்கள் என்ன செய்வார்கள்.?
7) பொறுத்திருக்கும் ஒவ்வொரு நாளும் மண்ணும் சூழலும் விசமாகிக்கொண்டே செல்கிறது.