அண்மைய எனது முகப்புத்தகப்பதிவும் - நண்பர்கள் பதில்களும்.
எனக்கு மட்டும் ஏன் இது எல்லாம் கண்ணில் பட்டுத் தொலையுது ?
ஒரு பாடசாலையில் எனது மகனது அனுமதிக்காக சென்றிருந்தேன் . பாடசாலை சொக்ஸ் வாங்கி வரும்படி மனைவி சொன்னதால் சொக்ஸ் வேண்டும் என்றேன் . ஒரு சோடி எவ்வளவு ? என்றேன் . 180 ரூபாய்கள் என்றார்கள். இரண்டு சோடி தரும்படி சொன்னேன். ஆயிரம் ரூபாய்தாளைக்கொடுத்ததும் அவர்கள் 860 என்று வாய்க்குள் முனகியபடியே மிகுதி 140 ஐயும் இரண்டு சோடி சொக்சுடன் 125 ஆண்டு நிறைவு மலர்(புத்தகம்) ஒன்றையும் நீட்டினார்கள். இது எதற்கு நான் கேட்கவில்லையே என்றேன். நல்ல உபயோகமான புத்தகம் என்று சிரித்தபடியே திணித்தார்கள். நான் ரசீது கேட்டேன். அதற்கு ரசீது தரமுடியாது என்றார்கள். ( அந்த முட்டாள்களுடன்
மீண்டும் சண்டை பிடிக்க விரும்பாமையால் [அண்மையில்தான் ஒரு பெரும் சமர் ஆரம்பித்திருந்தேன்] - எதெற்கெடுத்தாலும் இவன் மட்டும் நியாயம் கேட்டு சண்டை பிடிக்கிறான் மற்ற 240 பெற்றோரும் மூடிக்கொண்டுதானே போகிறார்கள் என்று ,இதைப்பார்த்துக்கொண்டிருக்கும் அந்த மூடிய பெற்றோர்கள் உட்பட எல்லோரும் கட்டாயம் சொல்வார்கள் என்பதால்.சண்டை பிடிக்காது ..) அடுத்த கவுண்டர்களில் கேட்ட ரசீது வழங்கிய கட்டணங்களை கட்டி விட்டு வந்தேன்.
எனக்குப்பின்னால் பெரும் கூட்டமாக பெற்றோர்கள் கதிரைகளில் அமர்ந்து தங்கள் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தனர். எனக்கு முன் வந்தவர்களும் எந்த மூச்சுப்பேச்சும் இன்றி எல்லா கட்டணங்கள் மற்றும் டொனேசன் போட்ட ரசீதுகளை வழங்கிச் சென்றனர்.
எனது கேள்விகள்
1)அது எப்படி ரசீது வழங்காமல் காசு அறவிட முடியும் - அதுவும் இவ்வளவு பப்ளிக்காக ?
2) சொக்சுடன் எப்படி புத்தகத்தை வலுக்கட்டாயமாக விற்க முடியும் ?
3)அரசு பணிகள் என்றாலே இப்படி எந்த நியாய தர்க்கமுமின்றி நடந்து கொள்ளும் இடங்கள்தானா ?
4)இதை கண்டுகொள்ளவே மாட்டார்களா ?
5) இதை முறையிட்டால் ஆய்வு செய்ய அரச இயந்திரத்தில் இடமிருக்கிறதா ?
6)அது எப்படி அந்த 240 பெற்றோருமு் மூடிக்கொண்டு செல்கிறார்கள்.? அப்ப நம்ம டிசைனில்தான் எதாவது கோளாறா ?
2) சொக்சுடன் எப்படி புத்தகத்தை வலுக்கட்டாயமாக விற்க முடியும் ?
3)அரசு பணிகள் என்றாலே இப்படி எந்த நியாய தர்க்கமுமின்றி நடந்து கொள்ளும் இடங்கள்தானா ?
4)இதை கண்டுகொள்ளவே மாட்டார்களா ?
5) இதை முறையிட்டால் ஆய்வு செய்ய அரச இயந்திரத்தில் இடமிருக்கிறதா ?
6)அது எப்படி அந்த 240 பெற்றோருமு் மூடிக்கொண்டு செல்கிறார்கள்.? அப்ப நம்ம டிசைனில்தான் எதாவது கோளாறா ?
என்பதிவிற்கு நண்பர்கள் இட்ட எதிர்வினைகள்.:
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .