மணிமாறன் மண்ணிமாறன் ஆனகதை
"நீங்கள் உஙகள் பெயரை இந்த எழுத்துக்களில் மாற்றிக் கொண்டால் செல்வம் கொட்டோ கொட்டு என்று கொட்டும். பண வரவு நீங்கள் நினைத்தாலும் நிற்காது.. ..
**மணிமாறன் மண்ணிமாறன் ஆன கதை**
"நீங்கள் உஙகள் பெயரை இந்த எழுத்துக்களில் மாற்றிக் கொண்டால் செல்வம் கொட்டோ கொட்டு என்று கொட்டும். பண வரவு நீங்கள் நினைத்தாலும் நிற்காது.. .."என்று ஒரு சோதிடர் சொல்லிக்கொண்டிருக்கிறார். நான் அவரது பதிவான கூரையுள்ள, மழை கசிந்து நான் உட்கார்ந்திருந்த இடம் தவிர ஆங்காங்கு ஈரமாகவுள்ள, ஈரத்தினால் பயங்கரமான பூஞ்சை மணம் அடித்துக்கொண்டிருக்கிற, போதாக்குறைக்கு மழையில் நனையப்பிடிக்காமல் அவரது வீட்டுக்குள்ளேயே நின்று ஆடு போட்ட பழுக்கையும், படுத்திருந்த நாயிலிருந்து வந்த வாசத்தையும் சகித்தபடி.....அப்பப்பா பாலாவின் படங்களில் மட்டும் காணக்கூடிய காட்சி!
இது நடந்தது பத்து வருடங்களின் முன்னே, ஒரு நண்பனுடன் அவன் வற்புறுத்தலுக்காகச் சென்று சும்மா ஒரு ஆர்வக்கோளாரில் நானும் சோதிடருடன் பேசியபோது(பேய் இருக்கா ? இல்லையா ?)அவர் சொன்னவை இவை.
சாத்திரியாரே நீங்களும் உங்கள் பெயரை எண் கணிதசாஸ்த்திர முறைப்படி மாற்றிவிட்டால் பிறகென்ன உங்களுக்கும் காசு கொட்டோ கொட்டென்று கொட்டுமே..ஆட்டுக்கு ஒரு கொட்டிலாவது கட்டி வீட்டுக்கூரையில் நாலு ஒடுகளையென்றாலும் மாத்தலாமே ? என்று கேட்க நினைத்தேன், நண்பனின் தர்மசங்கடத்தை நினைத்துக் கேட்கவில்லை.

