Showing posts with label Psychology in Tamil. Show all posts
Showing posts with label Psychology in Tamil. Show all posts

Tuesday, May 14, 2024

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences


 

இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal behaviour), வாழ்வியல் அனுபவங்கள் என்பன இரங்கல் தெரிவித்தல், துயர் பகிர்தல் பற்றிய பல பாடங்களை கற்றுத்தருகின்றன.


நாட்டிற்கு ஒரு குடும்பம் என உறவுகள் எல்லாம் சிதறி வாழும் இன்றைய நிலையில், செத்தவீட்டுக் கவலையைப் பகிர எமது சமூகங்களில் காணப்பட்ட பல நடைமுறைகளும், பண்புகளும் இல்லாது போய்விட, சாவின் வலியைவிட அதைப் பகிர ஆளில்லாத வலி மிகப்பெரிதாகவே உள்ளதை உணர முடிகிறது.

பிறப்பு, திருமணம் போன்ற ஏனைய வாழ்வின் திருப்புமுனைகள் போலவே, முக்கிய அம்சமான இறப்பின் போது நாம் நடந்துகொள்ள வேண்டியவை பற்றியும் இன்று எமது அடுத்த தலைமுறைகளிற்கு சொல்லிக்கொடுக்க வேண்டி இருக்கிறது. ஒரு உறவை இழந்தவர் எதிர்கொள்ளும் வலியும் வேதனையும் அதுபற்றிய புலம்பலும் இழவிரங்கல் (Grieving) என்று அழைக்கப்படுகிறது.

அன்புக்குரிய எவரது இழப்பும் பெரிதே. அதிலும் ஒரு குழந்தைக்கு தன் முதல் ஆறு மாதங்களுக்குள் அடையாளம் கண்டு உணரும், அதன் தேவை தீர்க்கும் அம்மா அப்பா போன்ற உறவுகளோடு உருவாகிவரும் பிணைப்பு என்பது மிகவும் வலிமையானது. அத்தகைய இழப்புக்கள் ஒருவருக்கு தன்னில் ஒரு பகுதியையே இழந்தது போல உணர வைக்கலாம். இறந்தவரின் வயதோ, உடல்நிலையோ அல்லது அந்த உறவை இழந்தவரின் வயதோ இந்த இழவிரங்கல் நிலையின் தீவிரத்தை குறைக்கும் காரணிகள் அல்ல. அடுத்தவரின் துயரின் அளவை நாம் தீர்மானிக்காது இருத்தல் வேண்டும். ஒரு உறவை இழந்த ஒவ்வொரு உயிரும் அதனால் ஏற்படும் உளவியல் பாதிப்பை ஒவ்வொரு வகையில் வெளிப்படுத்தும். அழுவதும், அன்பானவர்களின் பழைய நல்ல நினைவுகளைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசிப்புலம்புவதும் இந்த இழப்புக்களின்போது மனிதர்களில் பெரும்பாலானோர் செய்யும் காரியங்கள். இழப்பிலிருந்து மெல்ல மெல்ல வெளிவர உதவும் இயற்கையான பொறிமுறைகளில் (Bouncing Back/Resilience) இதுவும் ஒன்று.

இந்த இழவிரங்கல் எனும் செயற்பாட்டில் பின்வரும் நிலைகள் உள்ளன என அமெரிக்க உளவியலாளர் குப்லர் றோஸ் என்பவர் தனது “On Death and Dying” என்ற நூலில் குறிப்பிடுகிறார். இது பிரபலமான (வாதப் பிரதிவாதங்கள் உள்ள) ஒரு உளவியல் கோட்பாடாகும்.

1. Denial: இழப்பை ஏற்க மறுத்தல். திடீரென ஏற்படும் அந்த அதிர்ச்சியான இழப்பை முதலில் மூளை ஏற்க மறுக்கும்.

2. Anger: கோபம் - தாங்கமுடியாத இழப்பு தன்மீதோ அடுத்தவர் மீதோ கூட பெருங்கோபமாக மாறலாம்.

3. Bargaining: இழப்பை ஏற்க மறுக்கும் மனது ஆண்டவன் போன்ற அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ற உயர் சக்தியிடம் இழப்பை பிற்போடும்படி அல்லது இல்லாது செய்து விடும்படி கெஞ்சுதல். அல்லது இது எல்லாம் பொய்யாகி விடக்கூடாதா என்று ஏங்குதல், அல்லது இறந்தவர்களே தம்முடன் ஏதாவது வடிவில் வந்து பேசி ஆற்றுப்படுத்துவார்கள் என எதிர்பார்த்தல்.

4. Depression: மனஅழுத்தநிலை. இது வழமையான மன அழுத்தத்தின் சகல அம்சங்களையும் கொண்டிருக்கும். உச்சக்கட்ட மனவருத்தம் மற்றும் அதன் விளைவுகளான தனித்திருத்தல், பிடிப்பற்று இருத்தல் உட்பட அனைத்து அறிகுறிகளும் வெளிப்படும்.

5. Acceptance: இழப்பை ஏற்றுக்கொண்டு வாழ்வின் அடுத்த நிலைக்கு நகர்ந்து செல்வது. இந்தக் கட்டத்தில் இழப்பு என்பது வாழ்வின் ஒரு அங்கம் என்பது புரிந்திருக்கும்.

எல்லா மனிதர்களும் மேற்குறிப்பிட்ட எல்லா நிலைகளையும் அனுபவிப்பார் என்று சொல்ல முடியாது. அத்துடன் மேற்குறித்த ஒழுங்கில்தான் இந்த இரங்கல் செயற்பாட்டின் படிநிலைகளை கடந்து செல்வர் என்றும் இல்லை. ஆனால் அவற்றில் சிலவற்றிற்கு உள்ளாகக்கூடும்.

Sunday, September 17, 2023

ஆட்டிசம்-நம்பிக்கை தரும் ஸ்டெம் செல் தெரபி


 

Autism (ASD - autism spectrum disorder)என்று சொல்லப்படுகிற மூளைச் செயற்பாடுகளில் குறைபாட்டை உருவாக்கும் நோய் அண்மைய ஆண்டுகளாக மிக வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன. அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் கடந்த பத்து வருடங்களில், 136 சிறுவர்களில் ஒருவருக்கு என்று காணப்பட்ட இந்த எண்ணிக்கை தற்போது –(2023) 36 சிறுவர்களில் ஒருவருக்கு என்ற அளவில் அதிகரித்துள்ளது (The latest research in 2023 from the CDC shows that one in 36 children is now diagnosed with autism. - American Academy of Pediatrics )

எனது நண்பர்கள் சிலரின் பிள்ளைகளிற்கும் ஆட்டிசம் இருக்கிறது. எமது உணவுப் பழக்கவழக்கங்கள், செல்போன் கதிர் வீச்சு, தாயின் கர்ப்பகால உடல் கோளாறுகள், பரிணாம வளர்ச்சி சார்ந்த மாறுபாடுகள், MMR போன்ற தடுப்பூசிகள் போன்ற பல நூறு காரணங்கள் இதற்குப் பின்னால் இருக்கலம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் இன்னும் காரணம் கண்டுபிடிக்கப்டவில்லை எனினும் சடுதியான பாரிய அளவிலான அதிகரிப்பை மட்டும் சிறார்களில் அவதானிக்க முடிந்துள்ளது.
இந்த வகையான நோயினால் பாதிக்கபட்ட குழந்தைகள் பெரும்பாலும் அதி புத்திசாலிகாளாக இருப்பார்கள். அவர்களது உடலியக்க செயற்பாட்டில் இணைப்பு (Coordination) பிரச்சனைகள், அவதானக் குறைபாடுகள்(ADHD), போன்றவை ஆரம்பகாலத்தில் அவதனிக்கபட்டாலும் நமது மூளையை விட வேறுபட்டு நாம் தொட முடியாத எல்லைகளைக்கூட அவர்களது முளை பின்னாளில் தொடுவதுண்டு. உலகமே வியக்கும் எலான் மாஸ்க் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட ஒரு குழந்தையே. இந்த நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டீனும் ஆட்டிசத்தோடு வளர்ந்தவர்தான்.
பேச்சுப் பயிற்சி முதல் அவரவர் பாதிப்பிற்கு ஏற்ப நடத்தைசார் பாதிப்புகளுக்கேற்ற பயிற்சிகள் மற்றும் மருந்துகள் மூலம் இந்தக்குழந்தைகளிற்கு சிகிச்கைள் வழங்கப்படுகின்றன.

நம்பிக்கை தரும் ஸ்டெம் செல் தெரபி

மருத்துவத்துறையில் தறபோது மிகப்பிரபலமடைந்து வரும் ஸ்டெம் செல் தெரபி எனப்படும் சிகிச்சை முறை( பல நோய்களுக்கு தீர்வாக அமைகிறது) ஆட்டிசத்திற்கு மிகச்சிறந்த நிரந்தரத் தீர்வைத் தருகிறது என்கிறார்கள். உடலின் எந்த உறுப்பிற்கும் அடித்தளமாக அமையக்கூடிய இந்த ஸ்டெம் செல் - மூளையுள் செலுத்தப்பட்டு அங்குதேவைப்படும் நியூரான்களாக இவை மாற்றமடைவதால் பாதிக்கப்பட்ட மூளைப் பகுதியின் செயற்பாட்டுவிகிதம் அதிகரித்து குழந்தையின் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்புகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.

Saturday, January 22, 2022

உளநலப் பாதிப்பா ? யாரிடம் உதவி பெறுவது ?


சைக்கோசிஸ் - நியூரோசிஸ்(Psychosis, Neurosis) என இரண்டு வகையில் பிரித்துப்பார்க்கப்டக்கூடிய மனநலம் சார்ந்த பிரச்சனைகளில், சைக்கோசிஸ் எனப்படுவதுதான் நாம் நிஜ உலகத்தைவிட்டு விலகி இருத்தல்- அல்லது சுய உணர்வின்றி நடந்துகொள்ளல் (யாதார்த்தமற்ற நிலை) இதை உலக வழக்கில் மக்கள் சொல்லும் சொற்களாகிய 'சித்தப்பிரமை' மற்றும் 'பைத்தியம்' ஆகிய சொற்களுடன் இணைத்துப்பார்க்க முடியும்.

இரண்டாவது வகையாகிய நியூரோசிஸ் எனப்படக்கூடிய மனநலப் பிரச்சனைகளின்போது (inner struggles, mental and physical disturbances) பாதிக்கப்ட்டவர் சுய உணர்வுடனும் குறிப்பிட்ட சில பிரச்சனைகளால் தான் பாதிக்கப்பட்டிருப்பதை பகுதியளவாவது உணர்ந்தும் இருப்பர். மனச்சோர்வு, மன அழுத்தம், உறக்கப்பிறழ்வுகள், உண்ணல் சார்ந்த பிரச்சனைகள்(அதிகம் உண்ணல், அதீத உணவு தவிர்த்தல்...), பயவுணர்வுகள், அதீத கோபம் உட்பட்ட திடீர் உணர்வு நிலை மாறல்கள் போன்ற சில இதற்கான உதாரணங்கள்.(Depression, stress, eating disorders, personality disorders, phobias, sudden mood swings -bipolar etc..) 

Thursday, November 19, 2020

Tamil Psychology Youtube Channel - Learn psychology in Tamil .தமிழில் உளவியல் வீடியோக்கள் !


Tamil Psychology Tamil Youtube Channel (Click here)


அனைத்து மனிதர்களுமே தம்வாழ்நிலைக்கு ஏற்ற அளவிற்கான உளவியலை இயற்கையாகவே அறிந்தவர்கள்தான்.

மனம் மற்றும் நடத்தை பற்றிய விஞ்ஞான ரீதியான கல்வியே உளவியல் ஆகும்.

சைக்('psyche') என்ற சொல் கிரேக்கத்தில்- உயிரைக் குறிக்கும், லொகோஸ் என்பது கற்றல்('discourse or to study')எனப்பொருள் படும், எனவே Psychology என்பது உயிரைப்பற்றிக் கற்றல் என்று பொருள்படும். 

மனம் பற்றிய சிந்தனை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகக் காணப்பட்டது. எனினும்  உளவியல் துறை என்று ஒன்று முறைப்படுத்தப்பட்டு சுமார் 150 (1879) வருடங்கள்தான் ஆகின்றன. இரசாயனவியல்,பௌதிகம் போன்ற பல துறைகளுடன் ஒப்பிடும்போது உளவியல் துறை தவழ்ந்து வரும் ஒரு குழந்தை என்று சொல்லலாம். (1879 - ஜேர்மானிய ஆய்வாளர் வுண்ட் என்பவரால் உளவியல் ஆய்விற்கான ஆய்வுகூடம் அமைக்கப்ட்ட ஆண்டு இது )



ஆனால் பொதுமக்கள் மத்தியில் உளவியல் துறை பற்றிய பல தவறான புரிதல்களும் , தேவைக்கு அதிகமான நம்பிக்கை அல்லது எதிர்பார்ப்பும் உள்ளதை அவதானிக்கலாம். உதாரணமாக "உளவியல் படித்தவர் அடுத்தவர் மனதைப் புட்டுப் புட்டு வைப்பாராம்.." போன்ற கூற்றுக்களும் ,'உளவியலாளர்கள் எல்லோருமே ஆழ்மனதில் புகுந்து பல அதிசயங்களை நிகழ்த்துவோர்' என்ற நம்பிக்கைகளும்(முற்பிறப்பை அறிதல் etc..) மக்கள்  மக்கள் மத்தியில் நிலவுகின்றன. 

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை