சைக்கோசிஸ் - நியூரோசிஸ்(Psychosis, Neurosis) என இரண்டு வகையில் பிரித்துப்பார்க்கப்டக்கூடிய மனநலம் சார்ந்த பிரச்சனைகளில், சைக்கோசிஸ் எனப்படுவதுதான் நாம் நிஜ உலகத்தைவிட்டு விலகி இருத்தல்- அல்லது சுய உணர்வின்றி நடந்துகொள்ளல் (யாதார்த்தமற்ற நிலை) இதை உலக வழக்கில் மக்கள் சொல்லும் சொற்களாகிய 'சித்தப்பிரமை' மற்றும் 'பைத்தியம்' ஆகிய சொற்களுடன் இணைத்துப்பார்க்க முடியும்.
இரண்டாவது வகையாகிய நியூரோசிஸ் எனப்படக்கூடிய மனநலப் பிரச்சனைகளின்போது (inner struggles, mental and physical disturbances) பாதிக்கப்ட்டவர் சுய உணர்வுடனும் குறிப்பிட்ட சில பிரச்சனைகளால் தான் பாதிக்கப்பட்டிருப்பதை பகுதியளவாவது உணர்ந்தும் இருப்பர். மனச்சோர்வு, மன அழுத்தம், உறக்கப்பிறழ்வுகள், உண்ணல் சார்ந்த பிரச்சனைகள்(அதிகம் உண்ணல், அதீத உணவு தவிர்த்தல்...), பயவுணர்வுகள், அதீத கோபம் உட்பட்ட திடீர் உணர்வு நிலை மாறல்கள் போன்ற சில இதற்கான உதாரணங்கள்.(Depression, stress, eating disorders, personality disorders, phobias, sudden mood swings -bipolar etc..)

