Tuesday, December 23, 2014

மாறும் நம்பிக்கைகள் - மறுபிறவி,ஜோதிடம் மற்றும் ஆன்ம இரகசியம்.


சத்தியமாய் இது நானேதான்.


தலை்ப்பின் காரம் என்னவோ கொஞ்சம் கூடித்தான் போயிற்று.ஆனால் என் வாழ்வில் இருந்தே இவை பற்றிய பல அனுபவ  உதாரணங்களை அடுத்த பதிவுகளில் தரலாம். வாசிப்பவர்களின் எதிர்பார்ப்பை பொறுத்து. 

வாழ்வில் நிறைய குழப்பங்கள் நிறைந்த காலப்பகுதியாக இது இருந்து வருகிறது. நாற்பதை எட்டும்போது இப்படித்தான் தத்துவ சிந்தனைகள் வருமோ என்னவோ. ஆனால் எல்லோருக்கும் இதே வகையான குழப்பங்கள் வராது என்பது மட்டும் நிச்சயமாகத்தெரிகிறது. 

மறுபிறவி இருக்கிறதா(ஆம்)அப்படியாயின் எனது முற்பிறவி என்ன...யார் எல்லாம் பழந்தொடர்பால் இப்போதும் என்னுடன் பிறந்திருக்கிறார்கள் ?

இறைசக்தி பற்றி எனக்கு இரண்டாம் கருத்து இருந்தததில்லை ஆனால் கிரியைகளை ஏற்றதில்லை நான். இப்போது அவைபற்றிய மீள்பரிசீலனைகள் எழுகின்றன என் மனதில்.

ஜாதகம் என்பது நமது முற்பிறவிப்பாவ புண்ணியக்கணக்கு என்பது நம்பும் அளவிற்கு புரிய ஆரம்பிக்கிறது.

பச்சைத்துரோகிகளை மன்னிக் முடியாத மனம் இப்போது அவர்களது பாவ நட்டக்கணக்கை அவர்கள் விரைவில் சீர்செய்யவேண்டி வரும் என்ற நம்பிக்கை இருப்பதால். பிழைத்துப்போகட்டும் என்று மன்னிக்க முடிகிறது.

வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது பற்றிய எனது தேடல்களின் முடிவுகள்(மற்றவர்களது ஆய்வுகள் மூலமாக)தற்போது வலுவாகியிருக்கும் சோதிடம் ,மறுபிறவி பற்றிய நம்பிக்கைகள் என இணைந்து மிகப்புது தினுசான மனவோட்டத்தை உருவாக்கியிருக்கிறது.

கன்ம வினையை அனுபவிக்கவேண்டி இருப்பதை அவ்வப்போதைய சடுதியான தோல்விகளும் எதிர்பாராத வெற்றிகளும் புரிய வைக்கின்றன. கல்வியும் ஞானமும் பிறவிகள் தோறும்  தொடர்ந்து வருவது என்பதும் அது ‌ தொடர்பிறவிகள் மூலம் மேம்பட்டுச்செல்லும் என்பதும் புரிகிறது.

மனதின் சக்தி ,நம்புவதை அடையலாம் என்பன சிறுவயது முதல் அனுபவமாக இரு்ந்து வந்த விடையங்கள்.

கோடானு கோடி அண்டங்களில் நாம் மட்டும் தனியே இல்லை. சாவைப்பற்றி வருந்த எதுவுமே இல்லை. இந்த பழைய உடம்பை விட்டு இன்னும் புதிய ஒன்றை பெறலாம். புதிய உடல்,புதிய உலகம்...கன்மத்திற்கு ஏற்ற வாழ்க்கை,அறிவு பிறவிகள் தோறும் தொடரும் பெரும் சொத்து.வருந்த எதுவும் இல்லை.

 ஆன்ம தேடலும்  சிந்தனையும் காலம் காலமாக என்னுள் இரண்டறக்கலந்திருந்த ஒன்று என்றாலும் ஒரு சம்பவத்தை வெடிவைத்ததுபோல் என் வாழ்வில் உருவாக்கி  பணத்தை மட்டும் தேடி ஓட ஆரம்பித்த என்னை வாழ்வில் இடை நடுவே நான் கைவிட்ட தேடல்களின் பாதையில் திரும்ப வைத்த அந்த ஆத்மாக்களுக்கு என் வந்தனங்கள். ”எந்தரோ மஹானு பாவுலு அந்தரிகி வந்தனமுவுலு”(எந்த திசையில் மகான்கள் இருக்கிறார்களோ அந்த திசைக்கு வந்தனம்)

2 comments:

  1. பச்சைத்துரோகிகளை மன்னிக் முடியாத மனம் இப்போது அவர்களது பாவ நட்டக்கணக்கை அவர்கள் விரைவில் சீர்செய்யவேண்டி வரும் என்ற நம்பிக்கை இருப்பதால். பிழைத்துப்போகட்டும் என்று மன்னிக்க முடிகிறது.....

    சேர் எனக்கும் மன்னிப்பு உண்டா?

    ReplyDelete
  2. ஜாதகம் என்பது நமது முற்பிறவிப்பாவ புண்ணியக்கணக்கு என்பது நம்பும் அளவிற்கு புரிய ஆரம்பிக்கிறது.

    இதர்க்கு காரணம் உண்டா ஆசான்?

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை