Wednesday, January 13, 2016

சாம்பற் குருவியின் வரிமறந்த பாடல்



எனக்கு இருந்தது ஒரு காடு..
முட்களையும் இலைகளையும் முடிந்து..எப்ப‌டியோ..
எனக்கு பிடித்தபடி  அமைத்தேன் கூட்டை.

வரிமறந்த பழைய பாடலை அடிக்கடி
அபஸ்வரத்தில் பாடுவேன்.
நான் மட்டுமே கேட்க.

காலை வி‌டியக் கூவும் கடமை எனக்கில்லை.
எழும்புவேன் எப்பொழுதாயினும்.
சுள்ளெனச்சூரியச்சட்டியின் எண்ணைத்துளி சிந்தியாயினும்.
தினசரி
ஒரு பொழுதில் எழுவேன்.


பிறகு .. பாடலும் ...தேடலும்..கூடலும்.

அதே வரி மறந்த பாடல்தான் ....என்றாலும் ருசிக்கும் என் வாழ்வு.

நீயோ அல்லது பன்மையைச்சுட்டும் நீங்களோ
என் கூட்டில் ஒரு பருக்கைகூட விட்டெறியாதவர்கள்.

எந்த திசையில் நீங்கள் பஞ்சம் பிழைப்பவரோ
நானறியேன்.

கற்பனையில் கூடக் காணாத அருவம்   .

இலக்கணமில்லாத பாடல்...இடியுங்கள் இதன் கூட்டை என்றீர்கள்.

நானோ கவர்ச்சியற்ற சாம்பல் குருவி...
மயிர் கொட்டும் பருவத்தில்
பொறுக்க வந்த நாவல் பழங்களிற்காய்..

நெருப்பில் வாட்டப்பட்ட வரலாறை

எந்த வாயால் பாடுவதென்று தெரியாமலே


எரிந்துகொண்டிருக்கிறேன்.

3 comments:

  1. சுள்ளனெச்சூரியச்சட்டியின் எண்ணைத்துளி சிந்தியாயினும்.
    தினசரி
    ஒரு பொழுதில் எழுவேன்..
    ...
    இரசனையுடன் புதுமை ...
    உங்களது வார்த்தகை்கிரகணம் லட்ச லட்சோப எண்ணத்தாமரைகளை மொட்டவி்ழ்க்கிறது ....சேர்...

    ReplyDelete
  2. சுள்ளனெச்சூரியச்சட்டியின் எண்ணைத்துளி சிந்தியாயினும்.
    தினசரி
    ஒரு பொழுதில் எழுவேன்..
    ...
    இரசனையுடன் புதுமை ...
    உங்களது வார்த்தகை்கிரகணம் லட்ச லட்சோப எண்ணத்தாமரைகளை மொட்டவி்ழ்க்கிறது ....சேர்...

    ReplyDelete
  3. நானோ கவர்ச்சியற்ற சாம்பல் குருவி...
    மயிர் கொட்டும் பருவத்தில்
    பொறுக்க வந்த நாவல் பழங்களிற்காய்..

    நெருப்பில் வாட்டப்பட்ட வரலாறை

    எந்த வாயால் பாடுவதென்று தெரியாமலே


    எரிந்துகொண்டிருக்கிறேன்.


    super sir

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை