இறுதிச்சுற்றுத் திரைப்படம் - எதேச்சையாகத்தான் பார்க்க நேர்ந்தது. இப்படி எழுத வேண்டும் என்று துாண்டி விட்டது அதன் வீச்சு.
இப்படம் அழகியல் தேவைப்படுவோர்க்கானது.
ஒரு மீனவப்பெண்ணின் இயற்கையான திறனை எதேச்சையாகக்க காணும் பொக்சிங் கோச் மாதவன் அவளை உருவாக்கப்படும் பாடுகளும் - வித்தை தெரிந்த குரு திறமையான சிஸ்யப்பிள்ளையை தேடும் அந்த வேதனையும்- பாடுபட்டு அடையும் வெற்றியின் சுவையும்தான் கதை.
ஒரு வழிகாட்டியாக இருப்பவர் அவர் வழிகாட்டும் துறையில் மேம்பட்டவராக இருக்கலாம் அதற்காக அவர் தனிப்பட்ட வாழ்வில் சாதாரண மனிதனாகவும் சில சமயங்களில் சமூகம் எதிர்பார்க்கும் நெறிகளில் தவறியவனாகவும் இருக்கலாம் என்ற யதார்த்தத்தை மூஞ்சியில் அடித்துச்சொல்லும் யாதார்த்தமான பாத்திரப்படைப்பு மாதவனுடையது.
உலகத்தலைவர்களிலிருந்து சினிமா நடிகர்கள் வரை அவர்களது தனிப்பட்ட வாழ்வை குறிவைத்து குதறி மகிழ்பவர்களுக்கு இது படிப்பினை. உண்மையில் வாழ்வை ஓரளவு அறிந்து பல்வகை மனிதர்களுடனும் பழகி வெளி உலகை உணர்ந்து உள்ளவர்களிற்குத்தான் இந்தப்படம் நன்கு புரியும்.
கதாநாயகி அப்படி ஒன்றும் பெரிய அழகியல்ல. மிகச்சாதாரணம். ஆனால் உண்மையில் தேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை அவரது அக்காவாக வருபவரும் குத்துச்சண்டைப் பயிற்சி பெற்றவரே. எனவே கதை உயிருடன் உலா வருகிறது.
மீனவப்பெண்ணாக ,ஒரு சேரிப்பகுதியில் வாழும் கதா நாயகியும் அவரது மரியாதையற்ற மற்றும் துாசண வார்த்தைப்பிரயோகங்களும் உடல் மொழியும் ஆனால் சுத்தமான உள்ளமும் மிக மிக யதார்த்தம் . இதை அப்பகுதி மக்களை படங்களில் மட்டும் பார்க்காது இறங்கிப்பழகுபவர்களுக்கே நன்றாகப்புரிய முடியும்.
விரசமான காட்சிகள் இல்லை. அதீத காதல் கெஞ்சல்கள் கதறல்கள் இல்லை. போட்டி , வெற்றி ,இலக்கு என்று உயர்ந்த இலட்சியத்தை நோக்கி வேகமாக ஓடும் கதையில் அப்படியே மின்னல் போல கலந்தும் கலக்காதும் வந்துபோகும் காதல்.
கடைசிக்காட்சியில் வில்லக்கதாபாத்திரத்துக்கு காதாநாயகி பொது அரங்கில் வைத்து போன போக்கில் வழங்கும் தண்டனையும் ...அப்படியே ஓடிப்போய் மாதவனுடன் ஐக்கியமாவதும் என ..மிக மிக யதார்த்தமான படைப்பு.
ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுந்து நின்று பாராட்டிய சுமார் நான்கு வருட உழைப்பு இப்படம். வாழத்துக்கள் மாதவன் ,டிரைக்டர் மற்றும் கதாநாயகி உட்பட்ட ரீம்.
(79/100 )
இரண்டு குறிப்புக்கள்.:
1) 35 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு (மாதவனின் மனநிலை புரிவதற்கு) அதிகம் புரியக்கூடிய படம்.
2) குறுகிய வட்டத்தினுளும் ,சாதி சந்தி என்று கோடு போட்டு சிந்திக்கும் குழந்தை மனதைக் கொண்டும் வாழ்வோருக்கும் இந்தப்படம் வெறுக்கத்தக்கதாக இருக்கலாம்.
பெரிய அழகிகள் அற்ற,குத்துப்பாட்டு அற்ற,நகைச்சுவைக்கென தனியே ஒரு பகுதி(ரக்)அற்ற இந்தப்படைப்பு இந்திய விளையாட்டுத்துறையின் அரசியலையும் அசிங்கத்தயைும் வேகமாவும் சுவையாகவும் நெஞ்சில் அறைந்து சொல்லியிருக்கிறது.
வாழ்க பங்குபெற்ற அனைவரும். முடிந்தால் சந்திக்கிறேன்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .