Friday, June 17, 2016

வேர்ச்சுவல் வீரர்கள் ! - ( பேஸ் புக்கும் நம்ம இளைஞர்களும் )



மூஞ்சிக்கு நேராக
முடியாததால்
முகப்புத்தகத்தில் மட்டும்  ”கெத்துக்” காட்டும்
இன்றைய இளைஞர்கள்.


இருட்டு நிறத்தில் உள்ளவனும்
எடிட்டிங் புண்ணியத்தில்
காலைச்சூரியனும்
நாணும்படி
சிவந்து ‌ போகிறான்.

குண்டானவன் மெலிந்தும்
எட்டு நிமிடத்தில் எயிட் பக்ஸ் எடுத்தும்
எத்தனை க‌ோலத்தில் ஏமாற்றுகிறான்.

கற்பனையிற் கயிறு திரிக்கும்
இவர்கள்
எத்தனை லைக்ஸ் எடுக்கிறோம்
என்பதில்தான்
வாழ்வின் வெற்றி இருப்பதாய்
பாவம்..
ஏமாந்து போகிறார்கள்.

கோவில் வாசல்களில்
கையேந்தும் பிச்சைக்காரர் எண்ணிக்கையை
லைக் போடு மச்சான் என்றும் செயார்
 பண்ணு மச்சான் என்றும்
கெஞ்சும்
”பேஸ் புக் பெக்கேர்ஸ் ”
எண்ணிக்கை ஓவர்ரேக் செய்துவிட்டது

பேஸ் புக்கின் ”சுட்ட” ஸ்ரேற்றஸ்களை வைத்து
சுதந்திரப்போர் வீரர்களாகவும்
வைரமுத்துவின் வாரிசுகளாகவும்
தம்மை பில்டப்
செய்துகொள்கிறார்கள்.



குணத்துக்கும்
தம்பி ரைம்லைனில்
குரைத்ததுக்கும்
சம்பந்தம்  எதிர்பார்த்தால் ..ஏமாந்தீர்.

கரப்பானைக்கண்டு கால்மைல் ஒடுபவனும்
எழுதும் ஸ்ரேற்றஸ் என்னவோ..
”எழுக  தமிழினமே” என்பதுதான்.

முன்பின் தெரியாதவனின்
மொக்கைப்பதிவிற்கும்
”சூப்பர்டா .நைஸ்...”
என்று
மனசாட்சியே இல்லாமல்
பாெய்களை
‌கொமன்ஸாகக் கொட்டும்
இந்தத் தலைமுறையிடம்
நேரில் எப்படி நேர்மையை எதிர்பார்ப்பது.

அன்பு,பாசம்,நட்பு என்ற அளவீடுகளை
அறியாதவர்களாகி

”வீடியோ வியூஸ்...
கொமன்ஸின் எண்ணிக்கை
எத்தனை செயார் ?”

என்று புள்ளி விபரத்தில்
போகுது இவர்களின்
மாய வாழ்வின்
மதிப்பீடு.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை