Sunday, September 11, 2016

மூன்றாம் வகுப்பு விஞ்ஞானி - அனுபவச்சிறகுகள்-04

-பிஞ்சிலே பழுத்தது-


மூன்றாம்    வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன் அப்போது தான் தொலைக்காட்சியில் நைட் றைடர் , மற்றும் பல விண்வெளி சம்பந்தமான படங்கள் வந்துகொண்டிருந்தன. அவற்றால் கவரப்பட்டு நான் உருவாக்கிய ரோபோ என் வயது நண்பர்களிற்கு கிலியை கொடுத்தது.

கிட்டத்தட்ட இப்படித்தான்


கார்ட்போர்ட் பெட்டிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி உருவாக்கப்பட்ட பொம்மை அது. (அந்தக்கால திரைப்பட ரோபோர்ட்களின் தலை பெட்டிபோல சதுரமாக இருக்கும்) ‌ கைகள் இருக்க வேண்டிய இடத்தில் எனது இலத்திரனியல் பார்ட்ஸ் சேகரிப்பு பெட்டியில் இருந்து எடுத்த மோர்ட்டார்கள் உள்பக்கமாக குத்தப்பட்டு பொருத்தப்பட்டு , கார்ட்போர்ட்டில் தட்டையாக வெட்டி செய்யப்பட்ட   கைகளை அந்த  மோர்ட்டார்  நுனியில்  பொருத்தியிருப்பேன்.

மின் இணைப்புக்கள் எல்லாம்  ஒழுங்கின்றி ரோபோர்ட்டின் முதுகின் வலப்புறம் உள்ள துளை வழியாக வெளியில் வரும். எங்கள் வீட்டின் பின்புற ஹாலில் ஒரு ஐன்னலிற்கு அருகில் இதை நிறுத்தியிருந்தேன். எனவே அந்த ஐன்னலிற்கு வெளியே  (வீட்டின் வெளிப்புறமாக நின்று கொண்டு)இதை இயக்க முடியும்.


மோட்டாரிற்கு பற்றறிகள் மூலம் மின்சாரம் வழங்கியதும் அவை சுற்ற ஆரம்பிக்கும் அப்போது உடனடியாக மின்சாரத்தை துண்டிப்பேன். அத்துடன் கைகள் குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் உயராத வகையில் பல குண்டூசிகள் ரோபோர்ட்டின் தோள் பகுதியில் குத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் ரோபோ கைகளை அசைக்கும்.

என் ஒன்று விட்ட அண்ணனின் ஆறாம் வகுப்பு விஞ்ஞானப்புத்தகத்தில் உள்ள ஆய்வு முறைகளை கிண்டும்போது மின்காந்தம் செய்வதை கற்றிருந்தேன். எனவே அதைச்செயய செப்புக்கம்ியை சுருட்டி மின்சாரம் வழங்கும்போது தற்செயலாக அது மிகச்சூடாவதை கண்டுபிடித்திருந்தேன். அதன் மேல் சொறித்தனமாக மெழுகுதிரி மெழுகை தேய்த்துப்பார்தபோது புகைப்ப‌தை கண்டுகொண்டேன்.

எனவே சிறிய செப்புச்சுருளில் மெழுகை   தடவி ரோபோர்ட்டின் உள்ளே வைத்து மின்சாரம் மூலம் அதனுள் இருந்து புகை வர வைத்தேன்.

அதன் வாய் மற்றும் கண் பகுதிகளில் ”ப” வடிவில் வெட்டி அந்த ”ப” வடிவின் நடுவில் துளையிட்டு நுால் கட்டி மண்டையின் பின்புறமாக வெளியே வர வைத்து ,நுாலை மாறி மாறி இழுப்பதன் மூலம் ‌ரோபோர்ட் வாயசைக்கவும் கண்ணசைக்கவும் செய்வேன்.

இவற்றை என் அயல் வீட்டு என் வயதை ஒத்த(அவர்கள் என்னைப்போல்  இல்லாமல் வயதுக்குரிய புத்தியுள்ள உண்மையான அப்பாவிக் குழந்தைகள்   ) மற்றும் சில வயதுகள் கூடிய நண்பர்களிடம் அழைத்து காட்டுவேன். பல சந்தர்ப்பங்களில் அவர்கள் அலறியடித்து ஓடியிருக்கிறார்கள் ,குறிப்பாக புகை வரும் சந்தர்ப்பங்களில்.

- இன்று வரை அந்த புகை எப்படி ரோபோர்ட் இல் இருந்து வந்தது என்பதை என் நண்பர்களிடம் நான் சொல்லவில்லை.
சுவாரசியம் கருதி ஒரு வித்தை எப்படி செய்யப்ட்டது என்பதை மற்றவர்க்கு சொல்லக்கூடாது என்பதை நான் சிறுவயதிலிருந்தேு அறிந்திருக்கிறேன்.

(அடிக்குறிப்பு)

ஆ. மேலே வழங்கப்பட்ட உப தலைப்பிற்கு பொருத்தமான வேறு ஏதாவது விடயத்தை எதிர்பார்த்திருந்தீர்கள் என்றால் ஏமாந்தீர்கள். என் வயதிற்கு நான் எப்போதும் வயது கூடிய தனமானவற்றை செய்து வந்திருக்கிறேன் என்பதையே மேற்படி தலைப்பில் சொல்ல  முனைந்தேன்.  எனது முத்தல் வேலைகள் பலவற்றை அடுத்த கட்டுரைகளில் சொல்ல முயல்கிறேன்.



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை