அம்மம்மாக் குழாயும் அறிவிப்பாளனும். |
நான் மூன்றாம் வகுப்பில் செய்த கார்ட்போட் ரோபோ பற்றிய கட்டுரையை சிலர் சாத்தியமற்றது என்று சொல்லாம். (என்னுடன் பழகாதவர்கள்) எனவேதான் இங்கே ஒரு புகைப்பட ஆதாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
இது எனது 7 வயதில் எடுக்கப்பட்ட படம்.
வைரவர் கோவில் திருவிழாவில் வாங்கிய வாங்கிய அம்மம்மாக் குழலை உடைத்து(சிறிய நாதஸ்வரம் போன்றது)அதன் முன் பகுதியில் இருந்த குழாய் ஒலிபெருக்கி போன்ற பகுதியை தடியில் வைத்துக்கட்டி பின்னர் சணல் நுால்களை வயர் போல கற்பனை செய்து தொடர்ந்து இணைத்திருக்கிறேன்.
நான் யாருமில்லாத நேரத்தில் இதன் முன்னே நின்று ஏதோ பேசுகிறேன் ,அதை அவதானித்த எனது தாயார் போல்றோயிட்(உடனடியாகப்படம் கழுவப்பட்டு வரும்)கமெரா மூலம் ஒளிந்திருந்து பிடித்த படம் இது.
என்னோடொத்த வயதுச்சிறுவர்களெல்லாம் கோவில் திருவிழாக்காலங்களில் குச்சி மிட்டாயும் குருவி றொட்டியும் கிடைத்த சந்தோசத்தைக் கொண்டாடிய பொழுதுகளில் நான் எதையாவது புதிது புதிதாகச் செய்து கொண்டே இருந்தேன். அவற்றில் பல தயாரிப்புக்கள் நடைமுறையில் பயனற்ற கற்பனைப்படைப்புக்களாகவே அப்போது இருந்தன்.
பின்னர் அவற்றில் பல எனது வர்த்தக ரீதியான வெற்றிகளில் பயன்பட்டிருந்தன்
இன்னும் வரும்......
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .