10-11-2022
எப்படி மனிதர்கள் நிரந்தரமற்றவர்களோ அப்படியே அவர்களது குணாதிசயங்களும் நிரந்தரமற்றவை. இவன் 'கோள்மூட்டி' என்று பாடசாலைக்காலத்தில் நீங்கள் கண்டறிந்த ஒருவன் 20 வருடத்திற்குப் பின்னரும் அதே மாதிரித்தான் இருப்பான் என்று நினைப்பது முற்றிலும் தவறானது. ஒரு வயதில் எதெற்கெடுத்தாலும் கோவப்படும் ஒருவன், ஐந்தாறு வருடங்களில் சாந்த சொரூபியாக மாறியிருப்பதையும், சிறுபராயம் முதல் யாருடனும் அதிகம் பேசாது அமைதியாக இருந்துவந்தவன் ஒரு வயதிற்குப் பின்னர் அதிகம் பேசுபவனாக மாறுவதையும் நம்மிற் பலர் அவதானித்திருக்கலாம்.
ஆளுமையைத் தீர்மானிப்பதில் பரம்பரை அலகு(DNA),புறச்சூழல் என்பவை மிக முக்கியமான காரணிகள். தானாக சிந்தித்து உணர்ந்தும் சில குணவியல்பு மாற்றங்களை ஒருவர் உண்டுபண்ணலாம். ஆனால் ஒரு சில அடிப்படையான குணங்களை மாற்றவே முடியாது என்பது ஆய்வு முடிவு.