Wednesday, November 9, 2022

நண்பர்களுக்கு ஒரு இரண்டாவது சந்தர்ப்பம் ! ( Psychology of personality and behavior change)

 




10-11-2022


எப்படி மனிதர்கள் நிரந்தரமற்றவர்களோ அப்படியே அவர்களது குணாதிசயங்களும் நிரந்தரமற்றவை. இவன் 'கோள்மூட்டி' என்று பாடசாலைக்காலத்தில் நீங்கள் கண்டறிந்த ஒருவன் 20 வருடத்திற்குப் பின்னரும் அதே மாதிரித்தான் இருப்பான் என்று நினைப்பது முற்றிலும் தவறானது. ஒரு வயதில் எதெற்கெடுத்தாலும் கோவப்படும் ஒருவன், ஐந்தாறு வருடங்களில் சாந்த சொரூபியாக மாறியிருப்பதையும், சிறுபராயம் முதல் யாருடனும் அதிகம் பேசாது அமைதியாக இருந்துவந்தவன் ஒரு வயதிற்குப் பின்னர் அதிகம் பேசுபவனாக மாறுவதையும் நம்மிற் பலர் அவதானித்திருக்கலாம். 

ஆளுமையைத் தீர்மானிப்பதில் பரம்பரை அலகு(DNA),புறச்சூழல் என்பவை  மிக முக்கியமான காரணிகள். தானாக சிந்தித்து உணர்ந்தும் சில குணவியல்பு மாற்றங்களை ஒருவர் உண்டுபண்ணலாம். ஆனால் ஒரு சில அடிப்படையான குணங்களை மாற்றவே முடியாது என்பது ஆய்வு முடிவு. 

( Note: Case Studies  என்ற ட முறையிலான எனது உளவியல் ஆய்வு மற்றும் கற்றல் முயற்சி என்னைச் சுற்றி இருக்கும் நபர்களையும் உள்ளடக்கியிருக்கும். )

என்னுடன் சுமார் இருபது வருடங்களிற்கு மேல் பழகிவரும் ஒரு நபர் – அவரது 23-24 வயது வரை கூட அதிகம் பேசாதவர், வீட்டில் ஒரு மூலையில் முடங்கிக் கிடப்பார். உயர்தரம் உட்பட மேற்படிப்புக்களைத ;தொடரவி;ல்லை. பெற்றோர்களாலோ சகோதரர்களாலோ அவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் 30 தாண்டி, வாழ்வில் பல போராட்டங்;களைச் சந்தித்தபின்னர், இப்போது பேசத்தொடங்கினால் நிற்பாட்டுகிறார் இல்லை, மற்றவர்கள் சொல்வதை அமைதியாகக் கேட்கும் தன்மையையும் இழந்துவிட்டார், தொலைபேசியில் அவருடன் பேசுதலே சோர்வுதரும் அனுபவமாகிவிட்டது. (எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டனே!)

இதுபோல, பெண்கள் என்றாலே நூறடி ஓடியவரை பல ஆண்டுகள் கழித்துப் பெண் பித்தனாகவும், பாடசாலை நாட்களில் பித்தன் என்று நினைத்து ஒதுக்கியவனை அனைத்தும் துறந்த புத்தனாக வெளிநாடொன்றிலும் சந்தித்த அனுபவங்களையும் நினைத்துப் பார்க்கிறேன்.

ஒரு நபர் இப்படித்தான் என்று நிரந்தரமாக முத்திரை குத்தி ஒதுக்கி விட வேண்டாம்,  இரண்டாவது சந்தர்ப்பத்தை அவருக்கு வழங்கிப்பார்க்கலாம்( மூன்றாவது வேண்டாம், உடம்புக்கு நல்லதல்ல 😊 )) சில நேரங்களில், புதிய ந்ல்ல குணங்களை உடைய, ஒரு நல்ல நபரை அவர் பற்றிய பழைய அனுபவத்தால் நாம் இழந்துவிடாமலிருக்க இது உதவலாம்.. அதே நேரம் எவ்வளவு ஓதி ஓதிச் சொன்னாலும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பரம்பரை அலகால் வரும் சில குணங்கள் மாறவே மாறாது, அதில், என் ஆய்வில் நான் கண்ட மாற்றமுடியாத குணம் "கஞ்சத்தனம்'" (பல உண்டு இது மிகச் சிறப்பானது 😊 )

கொடை என்பது குடிப்பிறப்பு என்று பல பழந்தமிழ்நூல்கள் வாயிலாக கேள்விப்பட்டிருக்கிறோம், அந்தக் குடிப்பிறப்பு என்பது பரம்பரையைக் குறிப்பது ( சாதியோடு சேர்த்துக் குழப்பிக்கொள்ள வேண்டாம்) , இது நவீன சொல்லாடலில் பரம்பரை அலகு(டீ.என்.ஏ). இந்த பொருளாதார ரீதியான கஞ்சத்தனம் என்பது – சில குறித்த உறவினர்கள், குடும்பங்கள், ஊர் என்ற அளவிற்கு பரவிய மாற்ற முடியாத குணமாகத்தான் காணப்படுகிறது. கஞ்சத்தனத்திற்குப் பேர் போன ஊர்கள் கூட நமது பிரதேசத்தில் இருக்கின்றன. (இப்படி ஊர், இனம், நாடு , தொழில் என்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் சில பொதுக்குணங்கள் மனித சமூகங்களில் உண்டு.)

இந்த மக்கட் சமூகங்கள் பரம்பரையாக எதிர்நோக்கி வந்த வாழ்வாதாரப் பிரச்சனைகள், வளப் பிரச்சனைகள் என்பவை அவர்கள் மனங்களில் ஏற்படுத்திய வடுக்கள் மற்றும்பாதுகாப்பற்ற தன்மைiயால், எதிர்காலத்திலும் அப்படி வந்துவிடக்கூடாது என்று அவர்களது பரம்பரை அலகினூடக கடத்தப்பட்ட செய்தியாலும் மற்றும் அவர்களது சமூகம் வழங்கிய வழிகாட்டலினாலும் அவர்களை அறியாமலே இத்தகைய குணங்களைகப் பெற்று விடுகிறார்கள்.

என் பரந்த நண்பர் வட்டத்திலேயே, குறிப்பிட்ட சில ஊர்களைச் சேர்ந்த, குறித்த சில ஒத்த தன்மையுள்ள தொழில்-குடும்பப் பின்னணி உள்ளவர்கள் பெரும்பாலும் சொல்லி வைத்தாற் போல எச்சிற் ;கையால் காகம் விரட்டாத  கஞ்சர்களாகவே இன்றுவரை இருந்து வருகிறார்கள். 

அவர்களும் மாறவேண்டும், கொடுப்பதால் வாழ்வில் கிடைக்கும் நன்மைகள் கோடி மக்களே !

Note:  என் அனுபவத்தில் துரோகம், தேவையற்று எதற்கெடுத்தாலும் பொய் சொல்லுதல் போன்ற குணங்களை மாற்ற முடிவதில்லை. எனவே அவர்களுடன் மறு சந்தர்ப்ப றிஸ்க் எடுக்க வேண்டாமே !

S.Manimaran
Northern Psychological Research Institute 
Thellipalai.
 


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை