மணிமாறன் மண்ணிமாறன் ஆனகதை
"நீங்கள் உஙகள் பெயரை இந்த எழுத்துக்களில் மாற்றிக் கொண்டால் செல்வம் கொட்டோ கொட்டு என்று கொட்டும். பண வரவு நீங்கள் நினைத்தாலும் நிற்காது.. ..
**மணிமாறன் மண்ணிமாறன் ஆன கதை**
"நீங்கள் உஙகள் பெயரை இந்த எழுத்துக்களில் மாற்றிக் கொண்டால் செல்வம் கொட்டோ கொட்டு என்று கொட்டும். பண வரவு நீங்கள் நினைத்தாலும் நிற்காது.. .."என்று ஒரு சோதிடர் சொல்லிக்கொண்டிருக்கிறார். நான் அவரது பதிவான கூரையுள்ள, மழை கசிந்து நான் உட்கார்ந்திருந்த இடம் தவிர ஆங்காங்கு ஈரமாகவுள்ள, ஈரத்தினால் பயங்கரமான பூஞ்சை மணம் அடித்துக்கொண்டிருக்கிற, போதாக்குறைக்கு மழையில் நனையப்பிடிக்காமல் அவரது வீட்டுக்குள்ளேயே நின்று ஆடு போட்ட பழுக்கையும், படுத்திருந்த நாயிலிருந்து வந்த வாசத்தையும் சகித்தபடி.....அப்பப்பா பாலாவின் படங்களில் மட்டும் காணக்கூடிய காட்சி!
இது நடந்தது பத்து வருடங்களின் முன்னே, ஒரு நண்பனுடன் அவன் வற்புறுத்தலுக்காகச் சென்று சும்மா ஒரு ஆர்வக்கோளாரில் நானும் சோதிடருடன் பேசியபோது(பேய் இருக்கா ? இல்லையா ?)அவர் சொன்னவை இவை.
நேற்று எனது மாணவ நண்பன் ஒருவனைச் சந்தித்து பேசிக்கொண்nருந்தேன். ஒரு கணக்கியலாளரான அவன், தற்போது வேலையற்று இருக்கிறான். பேச்சுவாக்கில் சொன்னான், 'நான் இப்போது குழந்தைகளிற்கு மற்றும் நிறுவனங்களிற்கு எண்சாஸ்த்திரப்படி பெயர் வைப்பதை ஒரு சிறு பகுதிநேரத் தொழிலாகச் செய்து வருகிறேன்.' அப்படியா என்று கேட்டுக்கொண்டேன்.
திடீரென எனது பிறந்த எண்ணையும் எனது நிறுவனமொன்றின் பெயருக்கான எண்ணையும் சிந்தித்துவிட்டுச் சொன்னான், 'நீங்களும் பெயரை எண் கணித முறைப்படி எழுதினால், வருமான ஏற்றத்தாழ்வே இருக்காது, உச்சத்திற்கே சென்றுவிடுவீர்கள்.'
தொழில் நுட்ப உலகையே ஆட்டிப்படைக்கும் கூகுலின் தோல்வியுற்ற தயாரிப்புக்கள் சுமார் நாற்பதற்கு மேல். கூகுல் கிளாஸ்(கண்ணாடி) முதல் பேஸ்புக்கிற்குப் போட்டியாக வந்த கூகுல் பிளஸ் வரை அனைத்து தொழில் பிரிவுகளுமே அறைந்து சாத்தப்பட்டதையும், கம்பியூட்டர் உலகின முடிசூடா மன்னன் பில்கேட்சின் விண்டோஸ் கம்பியூட்டரில் வென்று மொபைல் போனில் கேவலமாகத்தோற்றுப்போனதையும், எந்தனை பில்லியன் டாலர்களைச் செலவழித்தும் ஒரு தசாப்தத்திற்கு மேல் போராடியும் வெல்லவே முடியாது போனதையும் உதாரணமாகச் சொல்லி, உயர்வு தாழ்வு - இன்ப துன்பம் என்பது சகலருடைய வாழ்விலும் மாறி மாறிச்சுழலும் சக்கரம். நிரந்தர தொடர் வெற்றிகளைப் பெற்ற எந்த சாதனையாளனும் உலகில் இல்லை என்றேன். தற்போதைய உலகின் முதலாவது பணக்காரனாக இருக்கும் எலான் மாஸ்க் உடைய முன்னைய மனைவி அவரிடம் காசு இல்லை என்றே, அவர் தொழில்முறையில் போராடிய காலத்தில் விவாகரத்துச் செய்திருந்தார். இன்று அவர் உலகின் முதலாவது பணக்காரர். இதைவிட ஏற்றமும் இறக்கமும் காண வேண்டுமா?
படத்திற்கு நூறு கோடிக்கு மேல் பணம் வாங்கும் ரஜினியின் இரு மகள்களுமே விவாகரத்தானவர்கள், விவாகரத்து ஒரு அவமானமல்ல ஆனால் அவர்கள் மனதில் எவ்வளவு அழுத்தத்தை கொடுத்திருக்கும்? அது ரஜினியை எவ்வளவு பாதித்துக்கொண்டிருக்கும் ?, மூத்த மகளின் நடவடிக்கைகள் பற்றி பல கிசு கிசுக்கள். ரஜினி உடல்(சிறுநீரப் பிரச்சினை..) உள ரீதியாக பல வருடங்களாக பிரச்சினையில்தான் உள்ளார். தனக்கு நிம்தி கிட்டவி;ல்லை என்று மிக அண்மையில் (2022)கூட ஒரு மேடைப்பேச்சில் குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கனவே ஆயிரம் யாகம் செய்து வரும், மந்திரங்களுக்கும் தந்திரங்களுக்கும் கோடிகளைக் கொட்டிக்கொடுக்கும் இந்தச் சினிமாப்பிரபலங்கள், அரசியல்வாதிகள் எல்லோரும் நம்ம "நியூமோரலிஸ்ட் நிமாலிடம்' வந்து பெரை மாற்றிக்கொண்டால் ஆகா..ஆஹஹஹா ! அடுத்த மணித்தியாலத்தலிருந்தே ஏறுமுகம்தான்.....
அன்புடன்
'மண்ணிமாறன்' - Mannimaran (சாஸ்த்திரப்படி நான் இப்படித்தான் எழுதவேண்டும்.)
S.Manimaran
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .