அன்பே!
என் காதல் மீம்ஸ்களை
கொத்தாக ஒரு
கொட்டி,
டிலிவறி செய்வதற்காய்
வாழ்க்கையின் சந்தியில்
உன் சிக்னலுக்காக
காத்திருக்கிறேன்.
நன்றாக யோசித்துக்கொள்.
நீ கிறீன் லைட் போட்டால்
மீம்ஸ்களை உன்வீட்டு வாசலிலும்
ரெட் லைட் என்றால்
ஒரே யூடேணில்..
இந்தக் விண்ணப்பங்களை
வீணடிக்காமல்
டிக்டொக் திவ்யா வீட்டிலோ
அல்லது
இன்ஸ்டாகிராம் இனியா வீட்டிலோ
இறக்கிவிடுவேன் கண்மணி!.
"அன்பே.."
என்று ஆரம்பிக்கும்
அத்தனை மீமையும்
பேரில்லாத டெம்ளேட்டாக
பிளேனாக
செட் பண்ணி
வைத்திருக்கிறேன்.
நேற்றுச்
சிரித்தவள் இன்று
முறைக்கிறாள் என்று
சேவ் எடுக்காமல் செத்துப்போக
நாம் என்ன 80ஸ் இளசுகளா?
இல்லை 90ஸ் கிட்ஸ்களா?
வட்ஸ் அப் வேலை செய்யாவிட்டால்
வைபர்..இருக்கில்ல
கவிஞர் காத்துவாயன் (ஆக மாறியுள்ள - இநதக் கவிதைக்காக)
ச.மணிமாறன்.
17/12/2024
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .