Autism (ASD - autism spectrum disorder)என்று சொல்லப்படுகிற மூளைச் செயற்பாடுகளில் குறைபாட்டை உருவாக்கும் நோய் அண்மைய ஆண்டுகளாக மிக வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன. அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் கடந்த பத்து வருடங்களில், 136 சிறுவர்களில் ஒருவருக்கு என்று காணப்பட்ட இந்த எண்ணிக்கை தற்போது –(2023) 36 சிறுவர்களில் ஒருவருக்கு என்ற அளவில் அதிகரித்துள்ளது (The latest research in 2023 from the CDC shows that one in 36 children is now diagnosed with autism. - American Academy of Pediatrics )
எனது நண்பர்கள் சிலரின் பிள்ளைகளிற்கும் ஆட்டிசம் இருக்கிறது. எமது உணவுப் பழக்கவழக்கங்கள், செல்போன் கதிர் வீச்சு, தாயின் கர்ப்பகால உடல் கோளாறுகள், பரிணாம வளர்ச்சி சார்ந்த மாறுபாடுகள், MMR போன்ற தடுப்பூசிகள் போன்ற பல நூறு காரணங்கள் இதற்குப் பின்னால் இருக்கலம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் இன்னும் காரணம் கண்டுபிடிக்கப்டவில்லை எனினும் சடுதியான பாரிய அளவிலான அதிகரிப்பை மட்டும் சிறார்களில் அவதானிக்க முடிந்துள்ளது.
இந்த வகையான நோயினால் பாதிக்கபட்ட குழந்தைகள் பெரும்பாலும் அதி புத்திசாலிகாளாக இருப்பார்கள். அவர்களது உடலியக்க செயற்பாட்டில் இணைப்பு (Coordination) பிரச்சனைகள், அவதானக் குறைபாடுகள்(ADHD), போன்றவை ஆரம்பகாலத்தில் அவதனிக்கபட்டாலும் நமது மூளையை விட வேறுபட்டு நாம் தொட முடியாத எல்லைகளைக்கூட அவர்களது முளை பின்னாளில் தொடுவதுண்டு. உலகமே வியக்கும் எலான் மாஸ்க் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட ஒரு குழந்தையே. இந்த நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டீனும் ஆட்டிசத்தோடு வளர்ந்தவர்தான்.
பேச்சுப் பயிற்சி முதல் அவரவர் பாதிப்பிற்கு ஏற்ப நடத்தைசார் பாதிப்புகளுக்கேற்ற பயிற்சிகள் மற்றும் மருந்துகள் மூலம் இந்தக்குழந்தைகளிற்கு சிகிச்கைள் வழங்கப்படுகின்றன.
நம்பிக்கை தரும் ஸ்டெம் செல் தெரபி
மருத்துவத்துறையில் தறபோது மிகப்பிரபலமடைந்து வரும் ஸ்டெம் செல் தெரபி எனப்படும் சிகிச்சை முறை( பல நோய்களுக்கு தீர்வாக அமைகிறது) ஆட்டிசத்திற்கு மிகச்சிறந்த நிரந்தரத் தீர்வைத் தருகிறது என்கிறார்கள். உடலின் எந்த உறுப்பிற்கும் அடித்தளமாக அமையக்கூடிய இந்த ஸ்டெம் செல் - மூளையுள் செலுத்தப்பட்டு அங்குதேவைப்படும் நியூரான்களாக இவை மாற்றமடைவதால் பாதிக்கப்பட்ட மூளைப் பகுதியின் செயற்பாட்டுவிகிதம் அதிகரித்து குழந்தையின் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்புகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.
ஸ்டெம் செல் குழந்தையின் பாதுகாக்கப்பட்ட ( இருப்பின்) தொப்புள் கொடியில் இருந்து அல்லது அதன் எலும்பு மச்சையிலிருந்து பெறப்பட்டு பயன்படுத்தப்படும்.
Big Pharma எனப்படும் மருந்துக் கம்பனிகளும்(மெடிக்கல் மார்ஃபியா) இவ்வாறான தீர்க்க முடியாத நோய்களை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களும் வழமைபோலவே ஸ்டெம் செல் தெரபி சிகிச்சை முறைகளை செய்வோர்க்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாக உலக மருத்துவத்துறையிவ் பேசிக்கொள்கிறார்கள்.
ஆட்டிசத்தால் பாதிக்கபட்ட குழந்தைகளை உடைய, பொருளாதார வளம் படைத்த பெற்றோர்கள் ( சில இலட்சங்கள் மட்டுமே) இந்த ஸ்டெம் செல் தெரபி பற்றி தேடி அறிந்து அதனைப் பெறலாம். அது பற்றிய தகவல்கள் அடங்கிய இந்திய விசேடமருத்துவ நிபுணர் ஒருவரின் பேட்டியின் லிங்கை கீழே வழங்கியுள்ளேன்
இந்தத் தகவல்களை பலரின் நன்மை கருதிப் பகிரவேண்டும் என்ற எண்ணத்தில் இங்கு தருகிறேன். மேலதிகமாக நீங்களே தேடி விபரங்களை அறிந்து பயன் பெறுங்கள்.
Video and Research report links are given below
Psychologist, MSc(Psychology)
Report Link : https://publications.aap.org/aapnews/news/23904/CDC-Autism-rate-rises-to-1-in-36-children
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .