Tuesday, May 23, 2017
சூனியக்கிழவிக்கு ஒரு மடல் !
நெடுந்துார ஊர் ஆச்சி !
வியத்துப்போய்
நீங்க எழுதிய
வெறுங் கடதாசி கிடைச்சுது
வள காப்பு வித்து
வயல்காட்டில் களைச்சுழைச்ச
கைக்காசப் போட்டுத்தான்
கடுதாசி போட்டீக
எனை மாத்த
ராப்பகலா
ஏதேதோ செஞ்சீக
அடியாளு வச்சீக
அரைமணிக்கு ஒரு தடவை
வேட்டைக்கு போறேனா
வெறும்வாய மெல்லுறேனான்னு
வேவுகளும் பாத்தீக
சந்திர முகிப்பேய் தொடங்கி
சவுக்கார்ப்பேட்டை பேய்வரைக்கும்
ஏவி எனைக்குழப்ப
ஏவல் வினை செஞ்சீக
மணிக்கொருக்கா கடுதாசி
வலைமனைக்குள்
மறைஞ்சிருந்து
மட மடன்னு வரைஞ்சீக
யார் வாழ்வில் விளக்கேத்த என்வாழ்வை எரிச்சீக
அடுப்பெரிக்க கொள்ளிக்கு
ஆள்விறகாப் போட்டீக
தர்மத்தைப் புரியாமல்
தார்மீகம் சொன்னீக
மநுநீதி காணாமல் உங்க மன
நீதி கண்டீக
மன்னனுக்கும் குடிகளுக்கும்
மாறுகிற நீதி உண்டு
பொன்னனுக்கும் சுப்பனுக்கும்
பொருந்துவன எல்லாம்
போதிமரப்புத்தனுக்குப் பொருந்திடுமா
சொல்லீக ?
மனக்கணக்கால்
மறுபடியும் ஒரு வாழ்வை
மண்ணாக்கி போட்டீக
வயசுக்கு ஏத்தாப்போல்
வளரலையே உன் ஞானம்
ஆச்சிக்குத்தெரியலையே
அடுத்தவக உயிர்நோவு
இருட்டுவழி போறவக
கயித்த மிதிச்சாலும்
கடிச்சது ஓரு பாம்பென்று
ஆளாளுக்கு அடிச்சுக்
களைச்சுக் கடைசியில
கருத்தறிந்து கொள்வதுபோல்
கடைசியில என்கதையில்
கண்டறிஞ்ச
கருத்தென்ன சொல்லீக ?
உடைச்சதுவோ மண்பானை
சில்லுச் சிதறி இந்த
மண்மேடு எங்கும்
சிதம்பித்தான் கிடக்கிறது
உடைச்சபானை ஒட்ட வைக்கப்
பிலா மரத்துப் பிசின் இருக்கா ?
விளா மரத்துப் பிசின் இருக்கா ?
****[வியத்து -வியர்த்து ]
ச.மணிமாறன்
23-05-2017
Labels:
மாறன் கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences
இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை
-
”பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றாள் அவ்வைப்பாட்டி. நமது தினசரி வாழ்வில் பல விதமாக பிச்சை எடுக்கும் கற்றவர்களைக் காண்கிறோம். நேற்ற...
-
This article summarizes the dark side of using VPN(Virtual Private Network)services for free. How your privacy could be on risk? and, wh...
-
அம்புலிமாமா எனும் அரும்பெரும் பொக்கிஷத்தை என் சமவயதில் பயணிப்பவர்களால் பெரும்பாலும் மறந்திருக்க முடியாது.” வட்ஸ் அப்பும்”, ” வைபரும்”, ” பே...
-
யூனிவேர்சல் லோ ஒப் அற்றாக்சன் சீரிஸ் -01 Law of Attraction in Tamil இணையத்தளங்களில் தற்போது பரபரப்பாகவிவாதிக்கப்பட்டும் கொண்ட...
-
நல்ல டீ.என்.ஏ க்களின் இடப்பெயர்வின் விளைவே இன்றைய யாழ்ப்பாணம். லண்டனிலும்,கனடாவிலும்,கொழும்பில் வெள்ளவத்தையிலும் இன்னும் பெருமைமிகு...
-
என் வகுப்புக்கு மேற்பட்ட பாடசாலை விஞ்ஞானப் புத்தகங்களை வாசித்து அவற்றிலிருந்த பரிசோதனைகளைச் செய்து வருவதாலும்...பழைய ட்றங்குப் பெட்டி...
-
மணிவாசகர் நரிகளைப் பரிகளாக்கிய கதையினை நானும் அரங்கேற்றினேன் அப்போது எனக்கு வயது 13. ஏழாம் வகுப்பு படிக்கும் போது மீன் வளர்ப்பி...
-
ஆறாம் வகுப்பிலே கொமிக்ஸ் புத்தகங்கள்(சித்திரக் கதைப்புத்தகங்கள்)பரிமாறிக்கொள்வதிலிருந்து அறிமுகமாகி திடீரென நண்பனானவன் மதன். புலமைப்பரிசில்...
-
ஓ.எல் பரீட்சை முடிந்ததும் கூவிக் கூவிப் பிள்ளை பிடிக்கப்போகும் ரியூசன் மார்பியாக்களிடமிருந்து எங்கள் பிள்ளைகளைக் காத்தருளுங்கள். Plea...
-
Stories for young entrepreneurs 02 (Learning is everything) நஸீபா எனது முதல் மாணவி எனது முதலாவது மாணவி நஸீபாவும் அவரது குழந்தையு...
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .