Monday, November 13, 2017

நினைத்ததை நினைத்தவாறே அடைவதெப்படி ? (Secret Law of Attraction #1) Video - Updated


யூனிவேர்சல் லோ ஒப் அற்றாக்சன் சீரிஸ் -01

Law of Attraction in Tamil


இணையத்தளங்களில் தற்போது பரபரப்பாகவிவாதிக்கப்பட்டும் கொண்டாடப்பட்டும் கொண்டிருக்கும் மனித மன சக்திகள் பற்றிய சுவாரசியமான  கலைச்சொல்தான் ”லோ ஒப் அற்றாக்சன்” . ஈர்ப்பு விசையின் விதி -என்று மொழிமாற்றம் செய்து புரிந்து கொள்ளலாம். கலைச்சொற்களை மொழிபெயர்த்துத்தான் பயன்படுத்தவேண்டும் என்ற கட்சிக்கு எதிர்க்கட்சி நான். 

மனதில் ஆழமாக நம்பி-நான் இதை அடைய வேண்டும்-நிச்சயம் அடைவேன், என்று உறுதியாக நம்பி- வேண்டும்  பொருளை அல்லது சுகங்களை -வாய்ப்புக்களை நாம் அடையலாம் என்பதுதான்   இந்தத் தத்துவத்தின் சாராம்சம். 

இந்த விதிபற்றிய தமது அனுபவங்களை மக்கள் பலர் உரைக்கும் காட்சிகளடங்கிய ”சீக்கிறட்” என்ற வீடியோ யூரியூபில் சக்கைப்போடு போடுகிறது. (அதனது தமிழ் வடிவத்தை இங்கே காணலாம். Video Link  )

இப்படியான விடையங்களை விவாதிக்கும் அந்த அரிதான நண்பர்களில் இருவர் இதைப்பற்றி என்னுடன் தம் அனுபவங்களையும் பகிர்ந்தமையும் எனது அனுபவங்களை பகிர வைத்தமையுமான சம்பவங்கள் மனக்குளத்தில் கற்களை விட்டு எறிந்ததில் -அலைகண்ட கடாலாகிப்பரபரக்கிறது சிந்தனைகள்.

Tuesday, November 7, 2017

விதி எனும் எல்லை- உங்கள் எல்லை எது ?

உங்களுக்கு என்று ஒரு வட்டம் கீறப்பட்டிருக்கிறது. எல்லை வகுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த எல்லை எது என்பதைப் புரிந்து கொள்ள கொஞ்சக்காலம் தேவைப்படும். அந்தக்காலம் உங்கள் புத்தி ஆன்ம பக்குவம் என்பதைப்பொறுத்து வேறுபடும் .

முயற்சி செய்யாமல் எங்கள் எல்லை தெரியாது. ஓடிக்கொண்டிருக்கும் எங்கள் ஒவ்வொருவரின் முன்னரும் ஒவ்வொரு துார எல்லைகளில் கண்ணுக்குத்தெரியாத கயிறு கட்டப்பட்டிருக்கிறது. ஓடிப்போய் முட்டி நிற்கும் போது மட்டுமே அவரவர்க்கு அவரவர் எல்லை புலப்படும். நாம் விடுவதில்லை மீண்டும் தடைப்பட்ட  இடத்திலிருந்து வேறு திசை நோக்கி ஓடுவோம். மீண்டும் குறித்த துாரத்தில் கயிறு தடைப்படுத்தும். மூச்சு முட்டி களைக்கும் மட்டும் ஓடுவோர் சிலர். உயிர் போகுமட்டும் எல்லை உடைக்கலாம் என்று ஓடுவோர்தான் பலர்.

குறைந்தது பத்துவருட முயற்சியிலாவது எமது எல்லை எவ்வளவு என்று கண்டு கொள்பவர்கள் அதி புத்திசாலிகள்.

Saturday, September 9, 2017

வைக்கோல் பட்டடை யுத்தம்

நான் ஒன்றும்  மாடல்லத்தான்..
என்றாலும்,
தினசரி
போராட வேண்டியிருப்பது என்னவோ
வைக்கோல் பட்டடை நாய்களுடன்தான்.

நொடியின் பெறுமதி
துளியும் வீணாக்காது வாழ்பவன்
இன்று,
வருடத்தைக்கூட
வருத்தப்படாது ‌தொலைக்கும்
மனிதப்பூச்சிகள்
மத்தியில்  ,
இன்னும் மோசமாய்

பயன்படுத்தாத நாட்கள்
எல்லாம்
செல்லாத (500) ரூபாய் நோட்டாக
வயதெனும் பீரோவில்
இறுக வைத்துப்  பூட்டப்படுகிறது.

ஆண்டில் அரைவாசிக்கு மேல்
அதி
கசப்பு நாட்களையே
என்
காலண்டர்
எப்போதும் காட்டுகிறது.
”அதி” போனால்
மீதிகூட
கசப்பு நாட்கள்தான்
உலக சமுத்திரங்களின் மொத்த
உப்பையும்
என் வாழ்வில்
யாரோ வாரிப்போட்டதுபோல்..  


Tuesday, May 23, 2017

சூனியக்கிழவிக்கு ஒரு மடல் !


நெடுந்துார ஊர் ஆச்சி !

வியத்துப்போய்
நீங்க எழுதிய
வெறுங் கடதாசி   கிடைச்சுது

வள காப்பு வித்து
வயல்காட்டில்  களைச்சுழைச்ச
கைக்காசப் போட்டுத்தான்
கடுதாசி போட்டீக

எனை மாத்த
ராப்பகலா
ஏதேதோ செஞ்சீக

அடியாளு வச்சீக
அரைமணிக்கு ஒரு தடவை
வேட்டைக்கு போ‌றேனா
வெறும்வாய மெல்லுறேனான்னு
வேவுகளும் பாத்தீக

சந்திர முகிப்பேய் தொடங்கி
சவுக்கார்ப்பேட்டை பேய்வரைக்கும்
ஏவி எ‌னைக்குழப்ப
ஏவல் வினை செஞ்சீக

மணிக்கொருக்கா கடுதாசி
வலைமனைக்குள்
மறைஞ்சிருந்து
மட மடன்னு வரைஞ்சீக

யார் வாழ்வில் விளக்கேத்த என்வாழ்வை எரிச்சீக
அடுப்பெரிக்க கொள்ளிக்கு
ஆள்விறகாப் போட்டீக

தர்மத்தைப் புரியாமல்
தார்மீகம் சொன்னீக
மநுநீதி காணாமல் உங்க மன
நீதி கண்டீக

மன்னனுக்கும் குடிகளுக்கும்
மாறுகிற நீதி உண்டு

பொன்னனுக்கும் சுப்பனுக்கும்
பொருந்துவன எல்லாம்
போதிமரப்புத்தனுக்குப் பொருந்திடுமா
சொல்லீக ?

மனக்கணக்கால்
மறுபடியும்   ஒரு வாழ்வை
மண்ணாக்கி போட்டீக

Monday, January 16, 2017

What a coincidence ? - அச்சமின்றி படத்தின் சூப்பர் சீன்ஸ் - பி.எ.பெ.வா பாகம் 3

பி.எ.பெ.வா பாகம் 3

வாழ்வில் எதிர்பார்க்காமல் சில சம்பவங்கள் ஒன்றோடு ஒன்று சிங்காகிப்போவது (Sync -பொருந்துவது) அல்லது எதிர்பாராமல் நடைபெறுவது ஆங்கிலத்தில்  Coincidence  எனப்படும்.



இணையத்தில் யாரோ பகிர்ந்த இந்த வீடியோக்காட்சிகள் எனது முன்னைய இரண்டு பதிவுகளுடனும் என்னமாய்ப்பொருந்திப்போகிறது  ! ?

Watch the video : What a coincidence ! :)  கீழே வழங்கப்பட்டுள்ள வீடியோவைப்பாருங்கள்.

நம்ம டிசைனில்தான் பிழையா ? -பி.எ.பெ.வா பாகம் 2

அண்மைய எனது முகப்புத்தகப்பதிவும் - நண்பர்கள் பதில்களும்.



எனக்கு மட்டும் ஏன் இது எல்லாம் கண்ணில் பட்டுத் தொலையுது ?


ஒரு பாடசாலையில் எனது மகனது அனுமதிக்காக சென்றிருந்தேன் . பாடசாலை சொக்ஸ் வாங்கி வரும்படி மனைவி சொன்னதால் சொக்ஸ் வேண்டும் என்றேன் . ஒரு சோடி எவ்வளவு ? என்றேன் . 180 ரூபாய்கள் என்றார்கள். இரண்டு சோடி தரும்படி சொன்னேன். ஆயிரம் ரூபாய்தாளைக்கொடுத்ததும் அவர்கள் 860 என்று வாய்க்குள் முனகியபடியே மிகுதி 140 ஐயும் இரண்டு சோடி சொக்சுடன் 125 ஆண்டு நிறைவு மலர்(புத்தகம்) ஒன்றையும் நீட்டினார்கள். இது எதற்கு நான் கேட்கவில்லையே என்றேன். நல்ல உபயோகமான புத்தகம் என்று சிரித்தபடியே திணித்தார்கள். நான் ரசீது கேட்டேன். அதற்கு ரசீது தரமுடியாது என்றார்கள். ( அந்த முட்டாள்களுடன்

மீண்டும் சண்டை பிடிக்க விரும்பாமையால் [அண்மையில்தான் ஒரு பெரும் சமர் ஆரம்பித்திருந்தேன்] - எதெற்கெடுத்தாலும் இவன் மட்டும் நியாயம் கேட்டு சண்டை பிடிக்கிறான் மற்ற 240 பெற்றோரும் மூடிக்கொண்டுதானே போகிறார்கள் என்று  ,இதைப்பார்த்துக்கொண்டிருக்கும்  அந்த மூடிய பெற்றோர்கள் உட்பட எல்லோரும் கட்டாயம் சொல்வார்கள் என்பதால்.சண்டை பிடிக்காது ..) அடுத்த கவுண்டர்களில் கேட்ட ரசீது வழங்கிய கட்டணங்கள‌ை கட்டி விட்டு வந்தேன்.

Saturday, January 7, 2017

பிச்சை எடுத்துப் பெருவாழ்வு - மீண்டெழும் நிதி கேட்கும் பாடசாலை .


”பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றாள் அவ்வைப்பாட்டி. நமது தினசரி வாழ்வில் பல விதமாக பிச்சை எடுக்கும் கற்றவர்களைக் காண்கிறோம்.

நேற்றைய தினம் (07/01/2017)பிரபல தேசியக் கல்லுாரி ஒன்றினது ஆறாம் வகுப்பிற்கு புதிய மாணவர்களைச்‌சேர்த்துக்கொள்ளல் சம்பந்தமான ஒன்றுகூடல் அதிபரினால் நடாத்தப்பட்டது.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து 160 எனப்படும் குறித்த பாடசாலைக்கான வெட்டுப்புள்ளியைத் தாண்டி புள்ளி பெற்று கல்வியமைச்சினால் நேரடியாக இப்பாடசாலைக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அனுப்பபட்டிருந்தனர்.


கலந்துரையாடலே காசு வாங்குவதற்குத்தான். அரசு எத்தனை சட்டங்களைப்போட்டாலும் பெயரை மாத்தி மாத்தி லஞ்சம் வாங்குவதில் அரச பதவியில் ‌உள்ள பெரும்பான்மையோர் நிபுணர்.

பாடசாலை அபிவிருத்திச் சங்கம் சார்பில் (அதாவது அதிபர் நேரடியாக வாய் திறக்காது) ஒருத்தர் காசு கேட்டுப் பேசினார். பாடசாலை செலவினமாக வருடாந்தம் ஒரு கோடிக்கு மேல் ஆவதாகவும் ,  (கல்வி அமைச்சில்  இருக்கும்  நேர்மையான முதுகெலும்புள்ள   ஒரு அதிகாரியாவது இதைப்பார்க்க மாட்டார்களா என்று ஏங்கி எழுதுகிறேன்.)அச்செலவினத்தில் 50 இலட்சம் மட்டுமே கல்வி அமைச்சினால் வழங்கப்படுவதாகவும்  மிகுதிச் செலவு ஆறாம் வகுப்பு அனுமதியிலிருந்தே பெறப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை