Tamil Psychology Tamil Youtube Channel (Click here)
அனைத்து மனிதர்களுமே தம்வாழ்நிலைக்கு ஏற்ற அளவிற்கான உளவியலை இயற்கையாகவே அறிந்தவர்கள்தான்.
மனம் மற்றும் நடத்தை பற்றிய விஞ்ஞான ரீதியான கல்வியே உளவியல் ஆகும்.
சைக்('psyche') என்ற சொல் கிரேக்கத்தில்- உயிரைக் குறிக்கும், லொகோஸ் என்பது கற்றல்('discourse or to study')எனப்பொருள் படும், எனவே Psychology என்பது உயிரைப்பற்றிக் கற்றல் என்று பொருள்படும்.
மனம் பற்றிய சிந்தனை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகக் காணப்பட்டது. எனினும் உளவியல் துறை என்று ஒன்று முறைப்படுத்தப்பட்டு சுமார் 150 (1879) வருடங்கள்தான் ஆகின்றன. இரசாயனவியல்,பௌதிகம் போன்ற பல துறைகளுடன் ஒப்பிடும்போது உளவியல் துறை தவழ்ந்து வரும் ஒரு குழந்தை என்று சொல்லலாம். (1879 - ஜேர்மானிய ஆய்வாளர் வுண்ட் என்பவரால் உளவியல் ஆய்விற்கான ஆய்வுகூடம் அமைக்கப்ட்ட ஆண்டு இது )
ஆனால் பொதுமக்கள் மத்தியில் உளவியல் துறை பற்றிய பல தவறான புரிதல்களும் , தேவைக்கு அதிகமான நம்பிக்கை அல்லது எதிர்பார்ப்பும் உள்ளதை அவதானிக்கலாம். உதாரணமாக "உளவியல் படித்தவர் அடுத்தவர் மனதைப் புட்டுப் புட்டு வைப்பாராம்.." போன்ற கூற்றுக்களும் ,'உளவியலாளர்கள் எல்லோருமே ஆழ்மனதில் புகுந்து பல அதிசயங்களை நிகழ்த்துவோர்' என்ற நம்பிக்கைகளும்(முற்பிறப்பை அறிதல் etc..) மக்கள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன.
எந்த மாத்திரையும் எடுக்காமல் வெறும் சிந்தனை மாற்றம் மூலமாகவே(CBT) பல பெரிய நோய்களைக்கூட மாற்ற முடியும் என்பதை மக்களும் பெரும்பாலும் வைத்தியர்களும் அறியாமல் அல்லது அதில் நம்பிக்கை கொள்ளாமல் இருத்தல் என்ற நிலையை மாற்ற வேண்டும். சில மணி நேர உளவியல் சிகிச்சை (கவுன்சிலிங்) மூலம் மாத்திரை இல்லாமலே பல நோய்களைக் குணப்படுத்தலாம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்.
உளவியல் ஆய்வு நிறுவனங்களோடு பணியாற்றிய அனுபவமும் மலேசியா,சிங்கப்பூர் அப்புறம் இலங்கையில் எனது சொந்தக்கல்வி நிறுவனத்தில் 10 ஆண்டுகளிற்கு மேற்பட்டகற்பித்தல் நடவடிக்கைகளால் பெற்ற அனுபவமும் , பல்தேசிய நிறுவனங்கள் உட்பட்ட பலவற்றிற்கு 16 வருடங்களாக மென்திறன் அபிவிருத்திப் பயிற்யாளரரகப் பணியாற்றிவரும் அனுபவமும் - தொடர்ந்து ஈடுபட்டுவரும் கற்றல் மற்றும் கவுன்சிலிங் செயற்பாடும் இந்தத்துறையில் கொஞ்சம் கருத்துக்களைச் சொல்லும் தன்னம்பிக்கையை எனக்குத் தந்துள்ளது.
கவுன்சிலிங் என்று சொல்லப்படும் உளவளத்துணைசெய்யும் துறை, தரம் குறைந்த கல்வி மற்றும் முறையற்ற பயிற்சி, இயல்பான சில அடிப்படைத்திறமைகள் உள்ளவர்கள் அதைத் தெரிவு செய்யாமை போன்ற காரணிகளால் இலங்கையில் உரிய மதிப்புப் பெறத்தவறியுள்ளது. அதை நெறிப்படுத்த வேண்டும் என்பது எனது நீண்டநாள் விருப்பம், அதற்காக உழைத்தும் வருகிறேன்.
உரிய மனப்பக்குவம் , உலக அறிவு, சமூகவியல் அறிவு மற்றும் அனுபவம் உள்ளவர்கள் இந்தத்துறையில் பணியாற்றினால் அது அதிசயிக்கத்தக்க மாற்றங்களை மக்கள் மத்தியில் உண்டாக்கலாம்.
சிந்திப்பதன் மூலம் - உடலில் வேதிப்பொருட்களைச் சுரக்க வைக்கலாம் , இந்தவேதிப்பொருட்கள் எங்கள் உணர்வுகளையும் நடத்தையையும் மாற்றும் அல்லது ஒரு உணர்ச்சி ஏற்படும்போது அதனை வேறு உணர்ச்சியாக மாற்றிப் புரிய முயற்சித்து (துன்பத்தை குறைத்து இன்பமாக மாற்றல்)சிந்தனையையும் நடத்தையும் மாற்றலாம் அல்லது நடத்தையை முதலில் மாற்றி சிந்தனையை மாற்றலாம். உதாரணம் சிரிப்பு மருத்துவம் -உரக்கச் சிரித்தல் மூலம் மனதில் மகிழ்ச்சிக்கான ஹோர்மோன்களை சுரக்கவிட்டு நம் நடவடிக்கைகளையும் மகிழ்வானதாக மாற்றல். இந்த சிகிச்சை முறை சி.பி.டி(Cognitive Behavioral Therapy ) எனப்படும். இதை எவர் வேண்டுமானாலும் கற்றுத் தன் வாழ்விலும் மற்றவர் வாழ்விலும் பயன்படுத்தலாம்.
கல்வி வேறுபாடின்றி இலகுவில் புரியக்கூடிய புத்தி உள்ள எவருமே அடிப்படை உளவியல் விடயங்களைத்தெரிந்து வாழ்வில் பிரயோகிப்பதன் மூலம் மாபெரும் மாற்றங்களை தமது மற்றும் அடுத்தவர் வாழ்வில் உருவாக்கலாம் என்பதை பரிசோதனைகள் மற்றும் கல்வி – அனுபவ அறின் ஊடாக அறிந்தபின்னர் , எனக்குத்தெரிந்த உளவியல் அறிவை அனைவருக்கும் வழங்க இந்த யுரியூப் சனலை ஆரம்பித்திருக்கிறேன்.
ஒரு இலவச ஒன்லைன் உளவியல் பயிற்சி நெறியையும் மக்களின் ஆதரவைப்பொறுத்து ஆரம்பிக்க எண்ணமுண்டு.(Basics of Psychology crash course - Free of charge)
இந்தத்துறையில் விருப்பமுள்ளவர்கள் இந்தச் சனலை சப்ஸ்கிறைப் செய்து உங்கள் ஆதரவுக்கரம் நீட்டும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
உளவியல் மட்டுமன்றி – வாழ்வில் வெற்றி பெறுதலுக்கான வழிகாட்டல்கள் உட்பட பல விடயங்கள் இந்தச் சனலில் பகிரப்படும்.
உங்கள் அன்பிற்கு நன்றி.
Like Tamil Psychology(Psychology in Tamil)on Facebook : TamilpsychologyLK
S.Manimaran
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .