Tuesday, December 20, 2022

வட்ஸ் அப் இல்லாட்டி வைபர் இருக்கே கண்மணி !


 

அன்பே!

என் காதல் மீம்ஸ்களை
கொத்தாக ஒரு
டிஜிட்டல் லாரியில்
கொட்டி,
டிலிவறி செய்வதற்காய்
வாழ்க்கையின் சந்தியில்
உன் சிக்னலுக்காக
காத்திருக்கிறேன்.
நன்றாக யோசித்துக்கொள்.
நீ கிறீன் லைட் போட்டால்
மீம்ஸ்களை உன்வீட்டு வாசலிலும்
ரெட் லைட் என்றால்
ஒரே யூடேணில்..
இந்தக் விண்ணப்பங்களை
வீணடிக்காமல்
டிக்டொக் திவ்யா வீட்டிலோ
அல்லது
இன்ஸ்டாகிராம் இனியா வீட்டிலோ
இறக்கிவிடுவேன் கண்மணி!.
அதற்காகத்தான்..

Wednesday, November 9, 2022

நண்பர்களுக்கு ஒரு இரண்டாவது சந்தர்ப்பம் ! ( Psychology of personality and behavior change)

 




10-11-2022


எப்படி மனிதர்கள் நிரந்தரமற்றவர்களோ அப்படியே அவர்களது குணாதிசயங்களும் நிரந்தரமற்றவை. இவன் 'கோள்மூட்டி' என்று பாடசாலைக்காலத்தில் நீங்கள் கண்டறிந்த ஒருவன் 20 வருடத்திற்குப் பின்னரும் அதே மாதிரித்தான் இருப்பான் என்று நினைப்பது முற்றிலும் தவறானது. ஒரு வயதில் எதெற்கெடுத்தாலும் கோவப்படும் ஒருவன், ஐந்தாறு வருடங்களில் சாந்த சொரூபியாக மாறியிருப்பதையும், சிறுபராயம் முதல் யாருடனும் அதிகம் பேசாது அமைதியாக இருந்துவந்தவன் ஒரு வயதிற்குப் பின்னர் அதிகம் பேசுபவனாக மாறுவதையும் நம்மிற் பலர் அவதானித்திருக்கலாம். 

ஆளுமையைத் தீர்மானிப்பதில் பரம்பரை அலகு(DNA),புறச்சூழல் என்பவை  மிக முக்கியமான காரணிகள். தானாக சிந்தித்து உணர்ந்தும் சில குணவியல்பு மாற்றங்களை ஒருவர் உண்டுபண்ணலாம். ஆனால் ஒரு சில அடிப்படையான குணங்களை மாற்றவே முடியாது என்பது ஆய்வு முடிவு. 

Thursday, November 3, 2022

எலான் மாஸ்க்கும் எண்கணித சாஸ்த்திரமும் ! (Numerology for your success ! )






மணிமாறன் மண்ணிமாறன் ஆனகதை

 "நீங்கள் உஙகள் பெயரை இந்த எழுத்துக்களில் மாற்றிக் கொண்டால் செல்வம் கொட்டோ கொட்டு என்று கொட்டும். பண வரவு நீங்கள் நினைத்தாலும் நிற்காது.. .. 

**மணிமாறன் மண்ணிமாறன் ஆன கதை**
"நீங்கள் உஙகள் பெயரை இந்த எழுத்துக்களில் மாற்றிக் கொண்டால் செல்வம் கொட்டோ கொட்டு என்று கொட்டும். பண வரவு நீங்கள் நினைத்தாலும் நிற்காது.. .."என்று ஒரு சோதிடர் சொல்லிக்கொண்டிருக்கிறார். நான் அவரது பதிவான கூரையுள்ள, மழை கசிந்து நான் உட்கார்ந்திருந்த இடம் தவிர ஆங்காங்கு ஈரமாகவுள்ள, ஈரத்தினால் பயங்கரமான பூஞ்சை மணம் அடித்துக்கொண்டிருக்கிற, போதாக்குறைக்கு மழையில் நனையப்பிடிக்காமல் அவரது வீட்டுக்குள்ளேயே நின்று ஆடு போட்ட பழுக்கையும், படுத்திருந்த நாயிலிருந்து வந்த வாசத்தையும் சகித்தபடி.....அப்பப்பா பாலாவின் படங்களில் மட்டும் காணக்கூடிய காட்சி!
இது நடந்தது பத்து வருடங்களின் முன்னே, ஒரு நண்பனுடன் அவன் வற்புறுத்தலுக்காகச் சென்று சும்மா ஒரு ஆர்வக்கோளாரில் நானும் சோதிடருடன் பேசியபோது(பேய் இருக்கா ? இல்லையா ?)அவர் சொன்னவை இவை.
சாத்திரியாரே நீங்களும் உங்கள் பெயரை எண் கணிதசாஸ்த்திர முறைப்படி மாற்றிவிட்டால் பிறகென்ன உங்களுக்கும் காசு கொட்டோ கொட்டென்று கொட்டுமே..ஆட்டுக்கு ஒரு கொட்டிலாவது கட்டி வீட்டுக்கூரையில் நாலு ஒடுகளையென்றாலும் மாத்தலாமே ? என்று கேட்க நினைத்தேன், நண்பனின் தர்மசங்கடத்தை நினைத்துக் கேட்கவில்லை.

Friday, January 28, 2022

ஏன் இன்னும் தலை தெறிக்க ஓடுகிறோம்?


 

(நாற்பது வயதிற்கு மேற்பட்ட(அல்லது அப்படி உணர்கின்ற) வாசகர்களிற்கு மாத்திரம்)

புரிந்து விட்டால் ஓடுவதை விட்டுவிடுவோம். புரிந்தாலும் புரியாத மாதிரி இருப்பதில்தான் சலிப்பை குறைத்து வாழும் இரகசியம் இருக்கிறது!. கடைசிவரை புரியாமலே ஓடிக்கொண்டிருப்போர் பாக்கியவான்கள். அவர்கள் சலிப்பின் வெறுமையை தூக்கமின்றி விட்டத்தை வெறித்தபடி அனுபவிப்பதில்லை.
ஓடிய களைப்பில் , அடுத்தநாள் சீக்கிரம் எழுந்து இன்னும் ஓடவேண்டும் எனும் நினைப்பில், படுத்ததும் தூங்கி விடுவார்கள்.
ஓடுவதைக் குறைந்த பின்னர்தான் உலகெங்கிலுமிருந்து பல பந்தயங்களிற்கு வெற்றிலை வைத்து அழைப்பார்கள்.அழைக்கிறார்கள். இது வாழ்க்கையின் முரண்.
இந்த மைதானம் எனக்குரியதல்ல. இங்கே ஓடி முடித்தாயிற்று. அடுத்த மைதானத்தை ஆயத்தப் படுத்து. புதிய விளையாட்டு, புதிய விதிகள், புதிய பரிமாணம்.
காசுப் பெட்டியில் சில்லறை விழும் சத்தத்திற்காய் தேவைகள் தீர்ந்தபின்னரும் ஓடிக்கொண்டே இருப்போர் தம் சவப்பெட்டி அருகே பறைச் சத்தம் கேட்கும்வரையில் நிறுத்துவதில்லை. குறைத்துக் கொள்வதுமில்லை.
.
நடுவயதிற்கு கிட்டே ஆயினும் கொஞ்சம் நின்று, நிதானித்து கூட்டிக் கழித்துப் பாருங்கள். "இவ்வளவு அல்லல்பட்டு ஓடி" சேர்த்தது தந்த நிம்மதி பெரிதாய் எதுவுமில்லை என்பது புரியலாம்.

Saturday, January 22, 2022

உளநலப் பாதிப்பா ? யாரிடம் உதவி பெறுவது ?


சைக்கோசிஸ் - நியூரோசிஸ்(Psychosis, Neurosis) என இரண்டு வகையில் பிரித்துப்பார்க்கப்டக்கூடிய மனநலம் சார்ந்த பிரச்சனைகளில், சைக்கோசிஸ் எனப்படுவதுதான் நாம் நிஜ உலகத்தைவிட்டு விலகி இருத்தல்- அல்லது சுய உணர்வின்றி நடந்துகொள்ளல் (யாதார்த்தமற்ற நிலை) இதை உலக வழக்கில் மக்கள் சொல்லும் சொற்களாகிய 'சித்தப்பிரமை' மற்றும் 'பைத்தியம்' ஆகிய சொற்களுடன் இணைத்துப்பார்க்க முடியும்.

இரண்டாவது வகையாகிய நியூரோசிஸ் எனப்படக்கூடிய மனநலப் பிரச்சனைகளின்போது (inner struggles, mental and physical disturbances) பாதிக்கப்ட்டவர் சுய உணர்வுடனும் குறிப்பிட்ட சில பிரச்சனைகளால் தான் பாதிக்கப்பட்டிருப்பதை பகுதியளவாவது உணர்ந்தும் இருப்பர். மனச்சோர்வு, மன அழுத்தம், உறக்கப்பிறழ்வுகள், உண்ணல் சார்ந்த பிரச்சனைகள்(அதிகம் உண்ணல், அதீத உணவு தவிர்த்தல்...), பயவுணர்வுகள், அதீத கோபம் உட்பட்ட திடீர் உணர்வு நிலை மாறல்கள் போன்ற சில இதற்கான உதாரணங்கள்.(Depression, stress, eating disorders, personality disorders, phobias, sudden mood swings -bipolar etc..) 

Word Cloud - Looking for like minded people for a coffee !

 

Knowledge-share, empathy, social cause, spiritual, multiverse, parallel universe, life-after-death, time travel, special relativity, general relativity, quantum level, quantum mechanics, wisdom, real consciousness, soul, reincarnation, purpose of life, going with the flow, self-actualization, extra terrestrial lives, faster than light, nature, arts, photography, AI, telepathy, law of attraction, vibrating universe,  dark-matter,

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை